இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

Spread the love

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190

ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று

பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்

Leave a Reply