இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

Spread the love

இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

மரணத்திற்கான காரணத்தைக்கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ்

வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த

அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை

முடிந்தவரையில் நேற்றைய தினம் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென

அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில்

மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்

    Leave a Reply