இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்
Spread the love

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காகத் தேடப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போது, ​​இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“கொத அசங்க” என அழைக்கப்படும் அமில நுவன், “சுட்டா” என்றழைக்கப்படும் ரங்க பிரசாத் மற்றும் கசுன் குமார சங்க ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக விவேக் நகரில் வசிக்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரங்கபிரசாத் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்களும், அமில நுவன் மீது 05 கொலைகள் மற்றும் கசுன் குமார சங்க மீது 04 கொலைகள் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இலங்கையில் கைது செய்யப்படுவதை தவிர்க்கவே அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சுமார் 15 நாட்களுக்கு முன்பு கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து 13 கைப்பேசிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவிற்கு வர உதவிய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.