அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

Spread the love

அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று காலை 10 ஆம் திகதி நடைபெற்றது..

சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்,

இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்

அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

நேற்று முன்தினம்; 9 ஆம் திகதி தொற்றுக்குள்ளான 10 கடற்படையினர் மற்றும் ஏனைய இரண்டு பேர் அடையாளங்காணப்பட்னர். அவர்கள் இரண்டு பேரும்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர். கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி மொதமாக

578பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறனர். தற்பொழுது தொற்றுக்குள்ளானவர்களில் 259 பேர் குணமடைந்து

தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மெல்போனில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 274 பேர் இன்று 10 ஆம் திகதி காலை 10 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால்

நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மற்றைய ஒரு குழுவினர் மலேசியாவில் இருந்து இன்று 10 ஆம் திகதி மாலை இலங்கை வரவுள்ளனர்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் புதிதாக வகுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்க

திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை (10) க்குள், ஜனாதிபதி செயலகம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவுகளை அறிவிக்கும். முன்னதாக, அந்தந்த பணியிடங்களில்

1ஃ3 ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பணியைத்

தொடங்குவது அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சுகாதார வழிகாட்டுதல்கள், சமூக இடைவெளி மற்றும் போக்குவரத்து திட்டம் போன்றவை

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நேரம் நடைமுறையில் இருந்த மாவட்டங்களில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தனிப்பட்ட

தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டியவர்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கு ஏற்ப வழங்கப்பட்ட

வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நேரம் வழக்கம் போல் தொடரும்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து கிடைக்கப்பெற்றுள்ளதால், பொது மக்கள்

அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கடந்த சில வாரங்களில், அனைத்து இலங்கையர்களும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது பங்களிப்பினை

வழங்கினர் . ஆதேநேரம் குறித்த கோவிட்-19 வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் பொலிஸ், ஆயுதப்

படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினர் ஆகியோரின் கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவது

ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Leave a Reply