அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
Spread the love

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் என டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார் ,யாழில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா இப்படி முழங்கியுள்ளார் .

தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய போராட்ட குழுக்களில் டக்ளஸ் தேவானந்தா ஒருவராவார் .

ஆனால் அந்த இலட்சிய பாதையில் தெளிவுற நேர்மையுடன் பயணிக்க முடியாத அவர் எதிரியுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான சாதிகளில்; ஈடுபட்டார் .

ஈழ தமிழர் வரலாற்றில் யார் இந்த டக்ளஸ் தேவானந்தா என்றால் அவருக்கு என ஒரு திறந்தவெளி கறுப்பு பக்கம் உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக பெரும் சாதனையை இவர் தமிழர்களுக்கு நாட்டுவார் என எதிர் பார்க்க பட்டது.

ஆனால் அது வெற்றிடமாகவே காண படுகிறது .

ஒன்று பட்டு ஒருமித்து பயணித்த தமிழ் போராளிகள் குழுக்களுக்கு இடையில் சதிகளை தூவி பிரித்தாண்டு ,இன்று ஒட்டு மொத்த தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியாத நிலையில் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா மாற்றம் பெற்றார் .

இது தவிர்க்க பட முடியாத ஒரு பக்கத்தின் பாதை என்பது அவரது உளதெளிவு .

ஆனால் அதனை ஈழ தேசிய இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ,புலிகள் இல்லா காட்டுக்குள் எலிகளுக்கு வேட்டை என்பதை போலவே இப்பொழுது இலங்கையில் பல பெருச்சாளிகள் உலவி திரிகின்றனர் .

அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்

வரலாற்றில் கிடைத்த மிக பெரும் வாய்ப்புக்களை டக்ளஸ் தேவானந்தாவும் தவறவிட்டு விட்டார் ,என்பதே அவரை எதிரியாக கருகியவர்கள் நெஞ்சங்களில் ஓரத்தில் இப்படி செய்து கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் ,அற்று போயுள்ளதை காண முடிகிறது .

வயது மூப்பாகி விட்ட நிலையில் ,ஐந்து ஆண்டுகளுடன் எனது ஆயூள் முடிந்து விடும் என டக்ளஸ் தேவானந்தா நினைத்திருப்பார் போல் உள்ளது .

இது அவரது அரசியல் கட்சியின் சிந்தாந்தம் எனவே அதனை யார் தான் மாற்ற முடியும் ..?,ஐந்து என்ன பத்து வருடங்கள் கூட அரசியலில் பயணியுங்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே .

கல்லான மனிதர் என்றாலும் ஒரு மூலையில் ஈரம் உள்ளது என்பதை தொலை காட்சி விவாதத்தில் பஞ்சாயத்து பண்ணிய உங்கள் நிலை கண்டு வியந்தேன் .

ஆதலால் உங்கள் செய்திகளை தவிர்த்து வந்த நான் ஒரு சிறு இடம் ஒதுக்கி பதிவிடுகிறேன் .

உங்களுக்கு நாங்கள் எதிரிகள் ஆனால் தமிழர்கள் இன்று யாரையும் எதிரியாக பார்க்கவில்லை .

ஏன் என்றால் அவர்களுக்கு எதிர்க்கும் பலம் இன்று இல்லை டக்ளஸ் தேவானந்தா அவர்களே புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .