விடை பெற்று ஏன் போனாய்

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார் அன்னார் செல்லத்தம்பி
Spread the love

விடை பெற்று ஏன் போனாய்

நேற்றெங்கள் நெஞ்சத்தில்
நெடு நாளாய் உறைந்தவா
நேரலையில் ஓடி வந்து
நெடு நேரம் பேசியவா

ஆவி உடல் துறந்தின்று
ஐயா நீ வீழ்ந்தாயோ
ஆறா துயரினிலே
அழ வைத்து பார்த்தாயோ

வீடு வந்த உன்னை
வீதியில வழி மறித்து
விபத்தில் ஊனாக்கி
வீழ்ந்து போக வைத்தாரே

பத்து மாதம் கோமாவில்
பார்வை இழந்து கிடந்தவரே
எழுந்து வர நீ மறந்து
ஏக்கம் தந்து ஏன் மறைந்தாய்

கனி மரத்து தோப்பாகி
காலம் எல்லாம் காத்தவரே
விழி எல்லாம் நீர் வைத்து
விடை பெற்று ஏன் போனாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-10-2022

செல்லத்தம்பி செல்வகுமார் துயரில் தோய்ந்தவர்க்கு கண்ணீர் சமர்ப்பணம் .

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்

Leave a Reply