புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

நீதிமன்ற உத்தரவையடுத்து, தினேஷ் ஷாஃப்டரின் உடல் மே 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் டிசெம்பர் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன