
நீதிக்கு இன்று பிறந்த நாள்
அன்பிற்கும் பண்பிற்கும் முதலானவன்
அறத்திலே உதிர்கின்ற பெருமாளிவன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற நேயனிவன்
நேர்மையில் இவனொரு தாயானவன்
சொல்லுக்குள் நேயத்தின் வில்லானவன்
சொன்னதை செய்கின்ற பிரபாகரன்
கண்ணுக்குள் தெறிக்கின்ற ஒளியானவன்
கரிகால பரம்பரை பேரனிவன்
வெள்ளையர் நாட்டில் வெறியானவன் – நீதி
வெந்தணல் மூழ்கியே முடிகின்றவன்
அடிமையை ஏறியே உதைக்கின்றவன்
அடக்கிட நினைத்தாரை மிதிக்கின்றவன்
தன்னலம் இன்றியே நடக்கின்றவன்
தரணியில் தன் புகழ் விதைக்கின்றவன்
வந்தாரை கரையேற்றி வைக்கின்றவன்
வழிகாட்டி வாழ்வியல் கொடுக்கின்றவன்
சட்டத்தில் வித்தைகள் குடிக்கின்றவன்
தர்க்கத்தில் தன் வித்தை கொட்டிறவன்
நுணுக்கத்தில் நூலாகி நுழைகின்றவன்
நுண்ணுயிர் போலாகி வெல்கின்றவன்
பிரம்மனாய் இன்று நீ பிறப்பெடுத்தாய்
பிரமைகள் பலதை உடைத்தெறிந்தாய்
இறவா நடக்கின்ற நீதிவானாய்
இன்று போல் என்றும் வாழ்ந்திடுவாய்
பிரியத்தை பிழிகின்ற பிரியனே – என்
பிரியத்தில் உறைகின்ற முதல்வனே
தலைகள் வணங்கிடும் தலைவனே – நீதி
தரணியை ஆண்டிடு மைந்தனே .
இன்றிவன் இன்றிவன் பிறந்தானாம்
இதயத்தில் இறைவனாய் நின்றானாம்
இன்றுபோல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இதயமே வாழ்திறேன் நீ ஆண்டிடனும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-10-2022
பிரிட்டனில் சட்டத்தரணி பிரியன் அவர்கள் பிறந்த நாளான இன்று 06-10-2022
வாழ்த்திய வாழ்த்து பா .
உங்கள் வாழ்த்துக்களை கீழ் உள்ள கருத்து பகுதியில் NAME மற்றும் கருத்தை பதிவு செய்தல் போதுமானது – மின் அஞ்சல் தேவை அல்ல

wish you happy birthday anna
Wish your happy birthday piriyan anna.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
nice bro