Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

“Mandous” புயல் நேற்று (09) காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது.

மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70

முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் சென்னை வானிலை நிலைய பணிப்பாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலைஇ கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,

திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய தென்மண்டல வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை காரணமாக 15 மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,
சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.