தொலைதூரங்களுக்கு பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் இதன் ஊடாக செய்யப்பட்டுள்ளன
Posted in இலங்கை செய்திகள்

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

இலங்கையில் நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடெங்கும் விசேட போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன .

பேரூந்து ரயில்கள் என்பன இவ்விதம் விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளன .

தொலை தூரங்களுக்கு பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் இதன் ஊடாக செய்யப்பட்டுள்ளன .

No posts found.
மாகாண பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு
Posted in இலங்கை செய்திகள்

மாகாண பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு

மாகாண பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதிஒதுக்கீடு

மாகாண பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு ,மாகாண பள்ளி உள்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; மேம்பாட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்துகிறார்

நிதி ஒதுக்கீடுகள்

மாகாண பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும்

வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிதியை பள்ளி மேம்பாட்டுக்கு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும், பள்ளி உள்கட்டமைப்பில் உள்ள

குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2026 மார்ச் 01 அன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் வெல்லவாய பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்களுடன் நடைபெற்ற ஒரு சுமூகமான

பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னர், பிரதமர் ஊவா வெல்லஸ்ஸ பிராந்தியத்தின் தலைமை சங்கநாயக்கரும், யுடகனாவ ராஜமகா விஹாரையின் தலைமை

வணக்கத்திற்குரிய ராஜகீய பண்டித அதி வணக்கத்திற்குரிய கல்தெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரை சந்தித்து, புதிய கல்வி சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கினார்.

மேலும், தொழிற்கல்விக்கு உரிய அங்கீகாரத்தை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய நவீன

படிப்புகளுடன் கூடிய 50 தொழிற்பயிற்சி மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டு தொடங்கி 6 ஆம் வகுப்புக்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க , சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட நர்த்தார் பாண்டிகையும் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையகத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்ட காலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மற்றும் புது வருட

பண்டிகையை முன்னிட்டு அவரது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை சென்று பார்வையிட்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .

அதேபோன்று புது வருட உள்ள நிலையில் இது சிறப்பு பார்வையிட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரும் இணைந்து புது வருட புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையை ,

இந்த சிறப்பு அதிபதி கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .

அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .

மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான

நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .

வீடியோ

அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை
Posted in இலங்கை செய்திகள்

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை ,விசேட பேருந்து சேவை பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்பொழுது மிக முக்கியமான நகரங்களுக்கு பயணிக்க, விசேட பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ,போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .

பண்டிகையை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை

பெசன் பண்டிகையை முன்னிட்டு , மக்கள் தமது இடங்களுக்கு ,இலகுவாக சென்று வருவதற்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அந்த வகையில் கொழும்பு மிகுந்தல ,தாந்திரிமலை ,அனுராதபுரமாகிய, பகுதிகளுக்கு இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் இலகுவாக பயணிக்கவும் திருடர்களினால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்குமான ,புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விஷயத்தை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து அமைச்சு

பண்டிகை காலங்கள் வருகின்ற பொழுது ,இலங்கையில் விசேடமான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு மக்களது பயண போக்குவரத்து இலகுபடுத்தும் நடவடிக்கையில் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஈடுபட்டுள்ளது .

வரவேற்கப்படக்கூடிய விடயம் என்று என பயணிகள் தமது மகிழ்வான கருத்துக்களை தெரிவித்து போக்குவரத்து அமைச்சுக்கு தெரிவித்து வருகின்றனர் .

கடை பூட்டு குடிகாரர் அவதி
Posted in இலங்கை செய்திகள்

கடை பூட்டு குடிகாரர் அவதி

கடை பூட்டு குடிகாரர் அவதி

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .

மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .

மதுபான கடைகள் அடித்து பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .

இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பல மில்லியன் வருமானம் இழப்பு

சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது

அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .

இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .

வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .

அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மதுபான சாலைகளுக்கு பூட்டு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு

கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களின் புனித திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பணிப்பாளர் நாயகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன்மூலம் மதுவற்ற பொங்கல் திருநாளை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு மாவட்டங்களிலும் இயங்கும் மதுபான சாலைகளில் அதிகமான தோட்டப்புற இளைஞர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமது குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், 2 பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று (25) இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இன்று திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட தூர சேவைகளுக்காக சுமார் 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், இன்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில்

ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்தார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில்

ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (51) என்பவரே காணாமல் போயுள்ளார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றனர் எனவும், அவர்கள் திருப்பி

வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், பொலிஸில் முறையிட்டனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு

இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்தில் இருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நேற்றைய (22) விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது. ஆரம்பத்திலேயே சொல்லவேண்டும் எங்களின் இந்த முயற்சி எவருக்கும் அரசியல் அவதூறுக்காகவோ நற்பெயருக்கு

களங்கம் விளைவிக்கவோ அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதோ அல்ல, உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதே எங்களின் முக்கிய நோக்கம் சனல் 4 தொலைக்காட்சியினால் இது வெளிச்சத்திற்கு வந்தது என்று சில தூங்கிக்கொண்டிருக்கும் எம்.பி.க்கள் சொல்கிறார்கள். இந்த ஈஸ்டர்

தாக்குதலின் உண்மை மற்றும் சூத்திரதாரி குறித்து முழு நாடும் விழிப்புடன் இருக்கின்றது. எனவே, செனல் 4 பற்றி நாங்கள் கூறத்தேவை இல்லை. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதன் சூத்திரதாரி மற்றும் உண்மை பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து பேசியுள்ளோம்.

இவ்வாறான தாக்குதல் அமெரிக்காவிலும் இடம்பெற்றது. இது அல்-கொய்தா 9 /11 தாக்குதல் என்று அழைக்கப்பட்டது. 9 /11 அறிக்கை என்னிடம் உள்ளன என்பதை கௌரவ சபாநாயகருக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் அமெரிக்கன் அல்ல. நான் இலங்கையன் இந்த ஆணைக்குழு அறிக்கையில் அமெரிக்கா எதையும் தணிக்கை செய்யவில்லை. எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

சபாநாயகரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. இது செனட் தலைவரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. அவ்வாறான பொய்யான நிபந்தனைகள் இந்த பாராளுமன்றத்தில் தான் போடப்பட்டுள்ளது. இது 9 /11 அறிக்கை. யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டது. 9 /11 ஆணைக்குழு கட்டமைப்பு ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மற்றும் குடியரசுக் கட்சியிலிருந்து 5 பேர். சமமாக நியமிக்கப்பட்டனர் ஏன் .

உண்மையை தேட வேண்டும். என்பதற்காகும் அவர்கள் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில், 9/11 அறிக்கையின் விளைவாக ஹோம் லேண்ட் சிக்கியுரிட்டி டிபாட்மென்ட் உருவாக்கப்பட்டது.

உளவுப் பிரிவின் பல்வேறு அம்சங்கள் மீதான விமர்சனம். இருந்த CIA, FBI மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விமர்சிக்கப்பட்டன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

நம் நாட்டில் என்ன நடந்தது? படிப்பினை பெற்றோமா? நம் நாட்டில் தெரிவுக்குழு அறிக்கை உள்ளது. மலல்கொட அறிக்கை. இந்த மலல்கொட அறிக்கையும் மறைக்கப்பட்டது. இது தகவல் அறியும் சட்டத்தினாலேயே வெளியே வந்தது.

அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொகுதி 1 உள்ளது. அதைத் தொட எங்களுக்கு உரிமை இல்லை. அதைப் பார்ப்பதற்கு நூலகத்தின் பின்னால் ஊர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் இன்னும் அதன் பிரதியைப் பெறவில்லை.. எங்களுக்கு 9/ 11 அறிக்கையைப் பெறலாம். 2019ல் நம் நாட்டில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கோ

அல்லது 225 பேருக்கோ முழுமையான அறிக்கையைப் பெற முடியாது. இதுதான் நிலைமை. இது வேடிக்கையானது. ஏன் இவ்வாறான நிலை உருவாக்கப்பட்டது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டு மக்களிடம் இந்த உண்மை யதார்த்தத்தை ஏன் மறைக்க வேண்டும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் மலல்கொட அறிக்கை, தெரிவுக்குழு அறிக்கை, ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்த அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். மேலும் இந்த முயற்சியை கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

இப்போது ஒரு கடுமையான பிரச்சினை உள்ளது பலர் ஏன் உண்மை வெளிவரவில்லை என்று சந்தேகிக்கிறார்கள். எனக்கும் உள்ளது.. சாட்சிகளுடன் சபைக்கு சமர்ப்பியுங்கள் ஏன் இந்த செயற்பாடுகளில் சந்தேகிக்கின்றோம் என இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகிறேன்.

முதல் கேள்வி வவுணதீவு பிரச்சினை

இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2018 நவம்பர் 30, இல் கொல்லப்பட்டனர். விசாரணைகள் டிசம்பர் 1 அன்று தொடங்கியது. டிசம்பர் 3 அரசாங்க உளவுத்துறை தலைவர் ஒரு கல்வெட்டின் பின்னால் ஒரு ஜாக்கெட் இருப்பதாகவும் தேடும்படியும் கேட்டார். அதன் பின்னர், கட்டுவாப்பிட்டி

குண்டுவெடிப்பு குறித்து டிஐஜி எஸ். பி.டி. ஜே. .பி.ஜெயசிங்கவைத் தேடினர். இப்போது அவர் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். டி.ஐ.ஜீ ஒரு நாயைப் பயன்படுத்தினார்.

அந்த நாய் அஜந்தனின் வீட்டிற்கு சென்றது. இது எமக்கு ஜாக்கெட்டை போட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரணத்திற்கு புலிகள் மீது பழி சுமத்தினர். சிஐடி தவறாக வழிநடத்தப்பட்டது. மேலும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் 5 அறிக்கைகள் உள்ளன. 2018 டிசம்பர் 5, 8, 13, மற்றும் 2019 ஜனவரி 3, இல், இந்த 4 அறிக்கைகளிலும் இந்தக் கொலைகள் புலிகளால்

செய்யப்பட்டவை என்று இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு கூறுகிறார். இறுதியில் சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்த அலுவலர்கள்தான் என்பது நிரூபணமானது. இந்த குண்டுவெடிப்பில் இந்த அலுவலர்களை கொன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு

வவுணதீவு பொலிஸ் அலுவலர்களின் கொலைச் சம்பவம் தொடர்பாக சிஐடியை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தவறாக வழிநடத்தியது. இதை விசாரிக்கவும். இது சரியா தவறா என்று

சொல்லுங்கள். நாம் முடிவுகளுக்கு வர முடியாது. நடந்த சம்பவங்களின் சங்கிலித் தொடர் உள்ளது. அதை விசாரிக்க அரசு தயாராக இல்லை.

இரண்டாவது சந்தேகத்திற்குரிய விடயம்

9/11க்குப் பிறகு படிப்பினை பெற்ற நிறுவனங்களில் FBIயும் ஒன்று. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் கணினிகள், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றைச் சரிபார்த்து, அவர்கள் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கிறார்கள். இது இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு

சொந்தமானதும் மற்றும் பயன்படுத்தப்பட்டதுமாகும். பெயர் தெரியவில்லை. கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் தேசிய இராணுவ புலனாய்வு அதிகாரி. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ஐபி முகவரியில் இருந்து சஹ்ரானுக்கு அதிகபட்ச தொலைபேசி அழைப்புகள் இருப்பது தெளிவாகத்

தெரிந்ததாக FBI தெரிவித்தது. ,. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன், சஹ்ரானை நாட்டின் பாதுகாப்புப் படையினர் தேடினர் என நாம் அனைவரும் அறிவோம். சஹ்ரானின் அணிகளைத் தேடினர். ஆனால் சஹ்ரான் இல்லை.

அந்த நேரத்தில், எஃப்பிஐ வழங்கிய ஐபி முகவரியில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் அதிக நேரம் பேசியிருக்கின்றார் என்பது தெளிவாகியது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சூலா கொடிதுவக்கு சொல்கின்றார் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை என்பதால் அவரைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சிஐடியின் எப்.பி தர்ஷிகாவிடம் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரிக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று. இந்த விஷயத்தை நாங்கள் விசாரிக்க வேண்டும். ஆராய வேண்டும்., அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்

மூன்றாவது விடயம்

சொனிக் சொனிக் என்ற விடயம். இந்த பாராளுமன்றத்துக்குள் சொனிக் சொனிக் என்றவர்கள் டானிக் டானிக் அமைச்சுக்களை எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். டானிக் டானிக் அமைச்சை எடுத்துக் கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் இப்போது பெனிக் பெனிக்

ஆகிவிட்டனர். அப்போது, ​​சொனிக் சொனிக் அமைச்சர் பதவி எடுக்க, டானிக் டானிக், இப்போது பெனிக் பெனிக். இது என்ன சொனிக் சொனிக் பிரச்சினை? தெளிவாகச் சொல்வதானால், சிறிய சஹ்ரான் மாத்தளையில் பிடிபடுகின்றார். போலீசார் கைது செய்கின்றனர்.. அவரை சி.ஐ.டி. கைப்பற்றுகின்றனர்.

அவர் பெயர் பஸ்குல் ரஹ்மான். கத்தாரில் உள்ள ஐசிசி குறித்து அவரிடம் விசாரித்த போது சொனிக் சொனிக்குடன் தொடர்புடன் இருந்ததாகவும் இந்த சொனிக் சொனிக் என்ற நபரின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஐபி முகவரியைத் தேடும்போது, ​​​​ அந்த சிப் நகர போக்குவரத்துப் பிரிவின் பெண்

போலீஸ் சார்ஜென்ட் என்பவருடையதாக இருக்கின்றது.. இது தனது சிம் கார்டு என்றும், அதை தனது காதலன் எஸ்ஐ பண்டாரவிடம் (ஐபி அப்போது) கொடுத்ததாகவும் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரி சின்ன சஹ்ரானிடம் கூறுகிறார் பல குண்டுகள் வெடித்தும், இதை ஏன் ஐஎஸ்ஐஎஸ் ஏற்கவில்லை என்று. ஒரு எஸ்ஐஎஸ் அதிகாரி சின்ன சஹரான் போன்ற பயங்கரவாதியிடம் இதை ஐஎஸ்ஐஎஸ்ஸிடம் ஏற்றுக்

கொள்ளுமாறு சொல்வது ஏன்?. இந்த தாக்குதலை ஐஎஸ் நடத்தியது என்பதை ஏற்க வேண்டும். நமது நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதைச் செய்கிறார்.

சின்ன சஹ்ரான் இந்தோனேசியாவுக்குக் கதைத்து கேட்டபோது, ​​பையத் செய்யவில்லையாம் என்று கூறியுள்ளார்… ஆனால் 23ம் திகதி இந்தியாவில் இருந்து சமூக வலைதளங்களுக்கு செல்லுகின்றது.

இந்த உண்மைகளை தேடிப் பார்க்கும் போது, ​​அரச புலனாய்வுப் பிரிவின் டி.ஐ.ஜி சம்பத் லியனகே, “இந்த எஸ்.ஐ. பண்டாரவைக் கேள்வி கேட்காதீர்கள். தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, எனவே இவர்களை விசாரிக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.

நான் யாரையும் குறிவைக்கவில்லை. இது உண்மை. நான் எந்த முன்முடிவுக்கும் வரவில்லை. இந்த சோனிக் சோனிக்கையும் விசாரிக்க வேண்டும். சோனிக் சோனிக்கை பயன்படுத்தி அரசியல் டானிக் அடித்தவர்கள்

இன்று மௌனமாக உள்ளனர். அவர்கள் இன்று இந்த சபையில் இல்லை. அவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் உண்மை வெளிப்படுகிறது. எனவே இதையும் விசாரிக்கவும்.

நான்காவது விடயம்

தாஜ் ஹோட்டலை தகர்க்க வந்த பயங்கரவாதி ஜமீல், அவனது பையையும் டெலிபோனையும் ஒரு மேசையில் வைத்திருக்கிறான். போனை எடுக்கிறார். பேக்கை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் செல்லுகிறான். அதன் பின்னர் தெஹிவளையில் உள்ள ட்ரெபிகல் இன்னுக்கு செல்கிறார். இந்த குண்டுதாரி தனது பையை ட்ரெபிகல் விடுதியில் வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் உள்ள சிகுரிட்டி விசாரிக்கிறார்.

அப்போது குண்டு வெடித்து விடுகின்றது.. அப்போது அவர் சொல்கிறார் மனைவி மீது கோபம் கொண்டதால் தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு மத வழிபாடுகளுக்காக வந்ததாக கூறுகிறார். மனைவியின் தொலைபேசி இலக்கம் கொடுக்கப்படுகின்றது அந்த சிகுரிட்டி முன்னாள் போலீஸ் அதிகாரி. ஜெமிலின் மனைவி அப்போது உண்மையைச் சொல்கின்றார்..

இப்போது பாதுகாப்பு அமைச்சின் இரண்டு அதிகாரிகள் எங்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் சந்தேகத்தை இழந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிக்கு அழைப்பு வருகிறது.ஜமீலின் மனைவி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்துள்ளார். ஜெமிலை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஜெமீல் சென்றுவிட்டதாக கூறுகிறார். பகல் 1.30 மணியளவில், ஜமீல் டிராபிகல் விடுதிக்குச் சென்று தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொள்கின்றார்.

3.30 மணிக்குப் பிறகு, பள்ளி காவலருக்கு வெள்ளவத்தை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு வருகிறது. 5 மணியளவில் பொலிசுக்குச் செல்லும்போது, ​​அங்கு ஜமிலின் மனைவியைச் சந்திக்கச் சென்ற பாதுகாப்பு பிரிவு அலுவர்கள் இருந்துள்ளனர்.

அப்போது இவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என்பது தெளிவாக காவலாளிக்கு தெரியவருகின்றது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஜெமிலின் மனைவி வீட்டுக்கும் வேறு வீட்டுக்கும்

சென்றது ஏன் என்பதுதான். இதில் எது உண்மை? என்ன தொடர்பு அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, புலனாய்வு அதிகாரிகள் அழைக்கப்பட்ட இலக்கங்களை ஆராய்ந்தபோது, ​​சிம் கார்டு சிலோன் ஷிப்பிங் லைன்ஸ், இலக்கம் 88, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 என்ற முகவரியாக இருக்கின்றது.. இந்த சிம்கள் போலி முகவரியில்

வாங்கப்பட்டுள்ளன. இந்த சிம்மை பயன்படுத்தி லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் முன்னெடுக்கப்பட்டமை மிகவும் ஆபத்தான விடயமாகும். கீத் நொயர், எக்னலிகொட, உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய சிம் அட்டைகள் இவை. அன்றும் இந்த முகவரியில்தான் பதிவு செய்யப்பட்டது.

இவை விசாரணையில் தெரியவந்த விடயங்கள் அதனால்தான் நூலகத்தில் மறைத்து வைத்திருக்கின்றனர். சபாநாயகர் அவர்களே, எங்கள் உரிமைகளின் பாதுகாவலர் என்ற வகையில், அவற்றின் அனைத்து பிரதிகளையும் அனைவருக்கும் வழங்குங்கள். மறைக்க வேண்டாம் இந்த நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.

ஜெமீல் தற்கொலை குண்டுதாரி பற்றி இராணுவ உளவுத்துறைக்கு தெரியுமா? வெடிகுண்டு வெடிக்கும் முன் இரண்டு வீடுகளுக்கு எப்படி சென்றீர்கள்? யார் செய்தது? பல்வேறு சாட்சியங்களில் இருந்து கிடைத்த தகவல்களில் இருந்தும் இதைச் சொல்கிறேன்.

நான் சொல்வது 100% சரிதானா என்று தெரிந்து கொள்ளுங்கள். நேற்று தெரிவுக்குழு நிறுவப்படும் என்று கூறப்பட்டது. கேலி செய்ய வேண்டாம். அப்படி நிறுவுவதானால் , 9/11 ஆணைக்குழு போல உறுப்பினர்கள் சமமாக இருக்க வேண்டும். சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அதற்கான முதுகெலும்பு உள்ளதா?

அதே போன்று முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஹீல் டூலின் சகோதரர் பல சந்தர்ப்பங்களில் சகோததர் பற்றி பயப்படுவதாகவும், சகோதரர் தீவிரவாதியாகிவிட்டதாகவும், இதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார்.

அப்படிச் செய்யாவிட்டால் பேரழிவுதான் என்றும் சொல்கின்றார் மஹில் டூல் இது பற்றி அரச உளவுத்துறை தலைவரிடம் கூறுகிறார். ஆனால் கணக்கெடுக்கவில்லை. இதையும் விசாரிக்கவும். உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

ஐந்தாவது விடயம் – சாய்ந்தமருது ஆயுதம்

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகளால் கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் எஸ்ஐஎஸ் சிஐடியை தவறாக வழிநடத்தினர். ஆனால், 2008ல், ஏறாவூர் போலீசில், ஆதம் லெப்பை என்ற ஊர்க்காவலர் உள்ளார். அவருக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் பணிக்கு வரவில்லை, துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை. அது தன் மனைவி வீட்டுக் கூரையில் இருப்பதாகச் சொல்கிறார். சரணடையாததால் மாமனார் கைது செய்யப்படுகிறார். 10 நாட்களுக்குப் பிறகு அவர் வெளியேறுகிறார். ஆதம் லெப்பையினால் வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் அகற்றப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் செயற்கையாக புகுத்தப்பட்டன. இப்போது இது தொடர்பாக வழக்கு விசாரணையில் உள்ளது..

அந்த வழக்கில், முரண்பட்ட சான்றுகள் இருப்பதாக்கூறி. ஆதம் லெப்பை விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றது. 16 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்கே ஒரு ஆயுதம் கிடைக்கின்றது. குண்டுவெடிப்பை சஹ்ரானின் சகோதரர் மற்றும் பெற்றோர் செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆயுதம் ஆதம் லெப்பையின் ஆயுதம் போன்றது. அதனை மேலும் விசாரிக்கும் போது சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதமும், ஆதம் லெப்பையின் ஆயுதமும் ஒன்றே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. அது மட்டும் அல்ல. எனது ஞாபகத்தின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 எமோ கெப்சியுல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தில் அவை இருந்ததாக கூறப்படுகிறது. அவை சாய்ந்தமருது சம்பவத்துடன் தொடர்புள்ள ஆயுதம் என தெரியவருகின்றது. அதனை மேலும் ஆராயும் போது, ​​தனது ஆயுதம் இராணுவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் குழுவினால் அல்லது இராணுவத்தின் உளவுப் பிரிவினால் எடுக்கப்பட்டதாக ஆதம் லெப்பை கூறுகிறார்.

இங்கே கடுமையான சந்தேகம் எழுகின்றது. விசாரியுங்கள். மறைக்க வேண்டாம். ஒரு பாரபட்சமற்ற விசாரணை செய்யுங்கள்.

ஆறாவது விடயம் – அபு ஹிந்த்.

ஹாதியா சஹ்ரானின் மனைவி. சஹ்ரானுக்கு எப்போதும் வீடியோக்களை அனுப்பும் ஒருவர் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரது மாற்றுப்பெயர் அபு ஹிந்த். அவர் பேசும் போது ஹாதியாவை சஹ்ரான் விரட்டி விடுவானாம். குறிப்பாக வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் மரணத்தில் தொடர்புடைய கபூர் மாமா என்ற கடும்போக்குவாதி சொல்கிறான் ஏப்ரல் 16 அன்று மேலிடத்தில் இருந்து சஹ்ரானுக்கு அறிவுறுத்தல் வந்ததாம் அந்த அறிவுறுத்தல்களின்படி, இந்த தாக்குதல் விரைவுபடுத்துமாறு இல்ஹாம் என்ற பயங்கரவாதி கூறுகின்றார். யார் இந்த அபு ஹிந்த் ? , 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது இந்த கோத்தபாய ராஜபக்ச நீதியை நிலைநாட்டுவார் என தெரிவித்தனர். அதனால்தான் இந்த சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்றும் இந்த அபு ஹிந்தை அவர்கள் தேடவில்லை. சஹ்ரானுக்கு மேலே ஒரு சூத்திரதாரி இருந்தார். அந்த நபரின் புனைப்பெயர் அபு ஹிந்த். இந்த அபு ஹிந்தை அடையாளம் காண வேண்டும்.

நவுபர் மௌலவி என்ற சூத்திரதாரி இருப்பதாக.சரத் வீரசேகர கூறினார்..சரத் வீரசேகர கூறும் நவுபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவில்லை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? அபு ஹிந்தைம் தேடுங்கள் என்று சொல்கிறேன்.

ஏழாவது விடயம்- சாரா ஜாஸ்மின்

இந்த குண்டுவெடிப்பில் சஹாரானின் மனைவி ஹாதியா உடனிருந்தார். அந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு சாரா ஜாஸ்மினின் குரல் கேட்டுள்ளது மற்றொரு சாட்சியத்தில், மேலும் இரண்டு பேர் அவளை தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாரா ஜாஸ்மினை பைக்கில் ஏற்றிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியான ஏஎஸ்பி மாஹின்கந்த கூறுகின்றார் சீசீடீவியை தேடுகின்றனர்.. அபுபக்கர் என்ற ஐ.பி., களவாஞ்சிக்குடி பொலிசார் பிடிக்கின்றனர் சாரா ஜாஸ்மினுக்கு 3 டிஎன்ஏ சோதனைகள் உள்ளன. 1வது நெகடிவ். இறக்கவில்லை உயிருடன். உள்ளார் 16. உடல்கள் நீதிமன்றம் 16 என்று சொல்லுகின்றது. 2வதிலும் இல்லை. ஆனால் திடீரென்று 3வது டெஸ்டில் சாரா. இறந்தார் 16 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டதாக சொன்னால், அத்தியாயம் முடிந்துவிட்டது. உண்மை முடிந்துவிட்டது. இது என்ன பொய்? இறக்கும் வரை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமா?. 1 மற்றும் 2 இல்லை, ஆனால் 3 இல் உள்ளதாம்.. இவை உடல் இல்லாத பிரேத பரிசோதனைகள். யாரை ஏமாற்றுகின்றீர்கள் இது பற்றி விசாரிக்கவும். நாங்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

எட்டாவது விடயம்

கோட்டாபய 2019.11 18 ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22ஆம் திகதி பிரதமர் நியமிக்கப்படுகின்றார் அதற்கு முன்னதாக ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அமைச்சரவையை நியமிப்பதற்கு முன்பே செய்யப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை விசாரித்த 31 பேரை கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம் செய்துள்ளார். அது பொய்யல்ல. இது உண்மை. 700 சிஐடி அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நபர்களின் பெயர்களை சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்

டிஐஜி பி. கே டி பிரியந்தா

SSP ஷானி அபேசேகர

பியசென் அம்பாவில

நுவன் அசங்க

சி.டபிள்யூ விக்கிரமசேகர

ஜே. பி. டி. ஜயசிங்க (இவர் ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்)

ரஞ்சித் வெதசிங்க

டிஎஸ் திசேரா

கலனசிறி

ஹேமந்த குணசேகர

இந்திக்க லொகுஹெட்டி

தர்ஷிகா குமாரி

தனுஜா தமயந்தி

சந்திமா அருமப்பெரும

தீபானி மெணிக்கே

நாமலி ஹெராத்

கிரிதிசிங்க

மாரசிங்க

சாகர கரசிங்கஆராச்சி

எல்லெபோல

நிஷாந்த சில்வா

ஜெயசிங்க

இளங்கசிங்க

பசீர்

மெண்டிஸ் பிரேமகுமார

ஜகத்

லக்மல்

விஜிதா

ராஜபக்ச

இவர்கள்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை செய்த 31 பேர். இது மிகவும் சந்தேகத்திற்குரியது. கோத்தபாய ஏன் அவ்வாறு செய்தார்? இதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய வேண்டும்.

இன்னும் முக்கியமான விடயங்கள் உள்ளன. ஏப்ரல் 4 கலனிகம நுழைவாயிலுக்கு ஒரு லொறி வந்தது. இதற்கு முன் டபல் கெப் மற்றும் V8 வாகனமும் வருகிறது. நான் சொல்வதற்குப் பயப்படவில்லை. விசாரிக்கவும். 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைகளில் இரத்தத்துடன் மறைக்க வராதீர்கள்.

சரத் ​​வீரசேகர ஏன் இந்த லொரி பற்றி பேசும்போது நடுவில் குதித்தார். யார் பாதுகாக்கப்படுகிறார்கள்? நுழைவு வாயிலில் உள்ள அதிகாரிகள் ஒரு மணி நேரம் லாரி மற்றும் கெப் வண்டியை நிறுத்துகின்றனர். இந்த லொரியை விடுவிக்குமாறு மேல்மாகாண டி.ஐ.ஜி. ஒருவர் கூறுகின்றார். இந்த வெடிகுண்டு பாணந்துறையில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் சுட்டிக் காட்டவில்லை. விசாரிக்கவும். லொரியை விடுவித்தவர்கள் குறித்த பதிவுகள் உள்ளன. இதை விசாரிக்கவும்.

ரவி செனவிரத்ன ஒரு சிறந்த சிரேஷ்ட டி.ஐ.ஜி. அவர் TNL க்கு ஒரு தெளிவான அறிக்கையை வழங்குகிறார். இதை விசாரிக்கவும்.ஏப்ரல் 5 முதல் 2-0 வரை வாட்ஸ்அப் மெசேஜ்கள் 2 இந்திய கவுண்டர்பார்ட் ஏஜென்சிகளில் இருந்து வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணம் என்னவென்றால், தற்போது அந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன .கணினி நீக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் இல்லை. குறைந்தபட்சம் என்ன அடிப்படையில் உளவுத்துறைக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும்? இந்த தகவலை யார் கொடுத்தது என்று கண்டுபிடித்து உண்மையை சொல்லுங்கள். தனிப்பட்டவாறு நாங்கள் பொறுப்புகளை சுமத்தவில்லை. பாரபட்சமற்ற விசாரணைக்குப் பிறகு பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு தேவைப்படுகிறது. மேலும், ஹாதியாவை அழைத்துச் சென்ற ஜெயசிங்க என்ற அதிகாரி மர்மமான முறையில் கோவிட் பாதிப்பால் இறந்தார் எரிக்கப்பட்டார் எரித்தால் எல்லாம் முடிந்து விடும். சாட்சி இல்லை. பொருட்களும் இல்லை. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதையும் தேடுங்கள்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் கலந்துரையாடும் போது புலனாய்வுப் பிரிவினரும் அண்மையில் இருந்து வருகி்ன்றார்களாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஏன் அப்படி வருகிறார்கள்? இங்கே உளவுப் பிரிவுக்கு என்ன வேலை? உளவுத்துறையில் அனைவரும் இல்லை. கொஞ்சம் பேர் வந்து மூக்கை நுழைக்கின்றார்கள். இதைப் பற்றி விசாரியுங்கள். நடப்பவை அனைத்தும் உளவுத்துறை தலைவருக்கு வாரந்தோறும் செல்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். விசாரிக்கவும்.

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத்குமார என்பதனால் தொலைபேசியும் கணினியும் ரீசெட் செய்யப்பட்டு நீக்கப்பட்டன. அதுதான் யதார்த்தம்.

இன்று பல விடயங்ளை முன்வைத்தேன். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகளை ஆராயுங்கள். அரசியல் ஆதாயம் எங்களுக்கு தேவை இல்லை. நமக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நேற்று பொய்யொன்றை கூறினார். கர்தினால் இது பற்றி தெரிந்திருந்ததாகவும். கார்தினாலிடம் MSD பாதுகாப்புத் துறை கூறியதாம். அது ஒரு பொய். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கர்தினாலுக்கு MSD பாதுகாப்பு வழங்கப்பட்டது.. எனவே பொய்களை பரப்ப வேண்டாம். மேலும், புலனாய்வு அமைப்புகளினால் கர்த்தினாலுக்கு ஆபத்துகள் குறித்து தெரிவித்த கடிதத்தின் பிரதியை சபா பீடத்தில் வைக்குமாறு பிரதமரை கேட்கின்றேன். கார்டினாலிடம் தெளிவாகக் கேட்கிறார். கொடுத்த MSD .யார் என்று யார் தலைவர் சபாபீடத்தில். சமர்ப்பிக்கவும் பெயரைச் சொல்லுங்கள். கர்தினாலுக்குகு இந்த பாதுகாப்பு எப்பொழுது முதல் கொடுக்கப்பட்டது? இதற்கு பதில்கள் தேவை.

கர்தினாலுக்கு அரசு உறுப்பினர்கள் குண்டர்களைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசக் கூடாது என்று நான் கூறுகிறேன். நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். மேலும் இந்த சபையில் இன்னும் சில விடயங்கள் உள்ளன. ரவி செனவிரத்ன ஒரு நேர்மையான, ஒழுக்கமான டி.ஐ.ஜி. அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நான் கோருகிறேன். ஷானி அபேசேகர பற்றி ஒவ்வொன்றாக சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஷானி பிடிபட்டார் என்றும் பொய்யான சாட்சியம் அளித்தார் என்றும் ஒருவர் கூறுகிறார். 10 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பிணை கிடைத்தது. அந்தத் தீர்ப்பை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்.. இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கனம் நீதிமன்றம் கூறுகிறது. இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் பற்றியது. ஷானி அபேசேகரவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு நேர்மையான போலீஸ் அதிகாரி ஏன் வேட்டையாடப்படுகிறார்? கோட்டாபய இந்த வேட்டையை ஆரம்பித்தார். மேலும் ஷானி அபேசேகர பற்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறுகிறது. அவருக்கு அனைத்து நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் ஓய்வூதியம் வழங்கவும் என்று, மோசடிக்காரர் ஒருவருக்கு இவற்றைக் கொடுக்கும்படி பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்காது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவற்றை மிக விரைவில் கொடுக்கவும்.

ஷானி அபேசேகர மற்றும் ஏனையோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கம்பஹா நீதிமன்றத்தில். இதனை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன். சானி நாட்டை விட்டு ஓட மாட்டார். போலிக் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். அவதூறு பேசாதீர்கள்

எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். பயங்கரவாதத் தலைவர்கள் தங்களைத் தாங்களே கொல்ல மாட்டார்கள். அது உண்மை. சஹரானுக்கும் மேல் ஒருவர் இருந்தார். அவர்தான் அபு ஹிந்த். நான் யாரையும் அவமதிப்பதில்லை. இந்த உண்மையைக் கண்டுபிடிக்க தாமதமாக வேண்டாம் .இந்த அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது என்று நான் கூறுகிறேன்..

அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுவது யார்? எனக்கே வெட்கமாக இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையிடம் ஏராளமான பணம் இருப்பதாக ஒரு கத்தோலிக்க எம்.பி. கூறுகிறார் அந்த மனிதனுக்கு வெட்கமில்லை. வாக்குக்காக, ஈஸ்டர் தாக்குதலை விற்பனை செய்தார்கள் . ஒரு கத்தோலிக்கராக இருந்து கொண்டு கத்தோலிக்க திருச்சபையிடம் பணம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நானும் பொறுப்பை ஏற்கிறேன் யாரும் கை கழுவ முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் வழங்கப்படுமாம். ஒரு உயிரின் மதிப்பு 10 இலட்சம். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக பாடுபட எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த விடயங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டறிய இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையைத் தேடுவதற்கு ஊழலற்ற ஒரு முறை தேவை. அதற்கான உள்ளூர் பொறிமுறை உள்ளதா? உண்மையில் து{ய்மையாக எதுவும் இல்லை. நான் சர்வதேச விசாரணைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அனைத்து உள்ளூர் முறைகளும் ஊழல் நிறைந்தவை. எனவே சர்வதேச விசாரணை தேவை. முதுகெலும்பு இல்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் செய்து காட்டுவோம். ஆனால் அரசியல் வேட்டையாட மாட்டோம். சாட்சிகளை மறைக்க மாட்டோம்.. அரசியல் எதிர்த் தரப்புக்கு தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்க மாட்டோம். இன்று நான் உண்மையைக் கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கிறேன். நானும் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அதனால்தான் இன்று இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.

தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் 04ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ,சில இறைச்சி கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு

சாராய கடைகள் நாளை அடித்து பூட்டு

இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு பல பகுதிகளில் சாராய கடைகள் அடித்து பூட்ட மதுவாரி திணைக்களம் முடிவெடுத்துள்ளது .

மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியாக கழிக்கவும் ,குடி மகன்கள் தொல்லை இல்லாது அந்த நாளை கழிக்க இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது .

No posts found.
பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

இலங்கையில் இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகையை முன்னிட்டு ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 300 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

நீண்டகாலமாக சிறைகளில் அடைக்க பட்டிருந்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு விடுவிக்க படுகின்றனர் .

No posts found.
தீபாவளி உண்மையும் புரட்டும்
Posted in இலங்கை செய்திகள்

தீபாவளி உண்மையும் புரட்டும்

தீபாவளி உண்மையும் புரட்டும்!

ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். அதற்கேற்ப புராணக் கதைகளைப் புனைந்தனர்.

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அறிஞர் பெருமக்களே அழுத்திக் கூறியுள்ளனர்.

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.

இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.

அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப் படுகிறது.

தீபாவளி உண்மையும் புரட்டும்

விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.

இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள்.

திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று.

அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம்.

சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.


ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, நூல்: “சமணமும் தமிழும்’’
பக்கம் 79, 80

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு-இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார்.

நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி-விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லோரும் விழித்து எழுந்தனர்.

மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான்.

மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.

(தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால், தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்-படுகிறது.

இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்த-மற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து.

சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்-களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர்.

அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்து விட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்’’, பக்கம்: 33, 34

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர்.

அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று.

தீபாவளி உண்மையும் புரட்டும்

கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்டதொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்.

தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும்.

தீபாவளி என்பது தீப+ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்.. ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்’’, பக்கம்: 200-201

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!


தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர்.

ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை),
நூல்: “தமிழ் சமயம்’’, பக்கம் : 62

தீபாவளி விஷ்ணுவுக்குரியது அல்ல!

நரகாசுரன் என்பவனைக் கொன்ற நாள்-தான் தீபாவளி என்கிறார்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத பல கதைகளைக் கூறி தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவற்றை-யெல்லாம் மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் மறுக்கிறார்.

தீபாவளி சிவனுக்குரிய திருநாள் என்கிறார். இதன்மூலம் கிருஷ்ணனுக்கு உரியது (வைணவர்-களுக்கு உரியது) என்பது மறுக்கப்படுகிறது.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடு-கின்றார்கள்.

ஆனால் அதன் உண்மை யறிந்தவர்கள் ஒரு சிலரே யாவார்கள். அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.


பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை யழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.


நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.

அப்படி யிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் _ பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே, அந்தகாசுரன்,

சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன், இப்படி புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடு வதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் _ விளக்கு; ஆவலி _ வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெரு-மானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி எனவுணர்க.

தீபமங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்கு-கின்றார்களன்றோ?


“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’’
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
(நூல்: வாரியார் விரிவுரை விருந்து)

அகராதிக் குறிப்பில் நரகாசுரன் கதை
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார்.

(இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)


சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப் பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
– நூல்: அபிதான சிந்தாமணி, ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்


மிகவும் புகழ்பெற்ற தமிழ் அகராதியான ‘அபிதான சிந்தாமணி’ கூறியுள்ள மேற்கண்ட கதை ஆரியர்களால் புனையப்பட்டது.


தீபாவலி என்பதே தீபாவளி ஆனது. தீபம் +ஆவலி = தீபாவலி. தீப வரிசை என்பது அதன் பொருள். அது சமணப் பண்டிகைக்கே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது.

இந்த மண்ணின் மைந்தன் நரகாசுரன். எனவே, பூமியை பாதுகாத்தவன். ஆரியர் கைப்பற்றாமல் நம் மண்ணை பாதுகாத்தவன் என்பதால் அவனை ஆரியர்கள் வெறுத்தனர்.

அந்த வெறுப்பின் வெளிப்பாடே மேற்கண்ட புராணம்.
சமணப் பண்டிகையை, விஷ்ணு பண்டிகையாக மாற்றி, இந்துப் பண்டிகை என்று கொண்டாடுவது மோசடியாகும்.


வாரியார் வைஷ்ணவ பண்டிகை என்பதை மறுக்கிறார். மற்ற அறிஞர்கள் தீபாவளி சமணப் பண்டிகை என்று உறுதி செய்துள்ளனர்.


எனவே, ஆரியப் புரட்டான இத் தீபாவளிப் பண்டிகையை நாம் புறக்கணிப்போம்.

நம்மை இழிவுபடுத்தும் பண்டிகையை நாம் கொண்டாடக் கூடாது என்று முடிவு எடுப்போம்! அதுவே அறிவுக்கும், மானத்திற்கும் உகந்த செயல் ஆகும்.

மஞ்சை வசந்தன்

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .

தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .

எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .

Posted in சினிமா

கவர்ச்சி உடையில் தமன்னா

கவர்ச்சி உடையில் தமன்னா

தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.

வித்யாசமான கவர்ச்சிகாட்டும் உடையில் தமன்னா


தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும்

நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ஹோலி பண்டிகையையொட்டி தமன்னாவுக்கு புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய

வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி

போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

    குண்டு வெடிக்கலாம் என்பதால் நாட்டு முழுவதும் இராணுவம் குவிப்பு

    கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

    இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

    இது தொடர்பாக கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேவேளை, வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.