ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
Spread the love

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நேற்றைய (22) விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது. ஆரம்பத்திலேயே சொல்லவேண்டும் எங்களின் இந்த முயற்சி எவருக்கும் அரசியல் அவதூறுக்காகவோ நற்பெயருக்கு

களங்கம் விளைவிக்கவோ அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதோ அல்ல, உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதே எங்களின் முக்கிய நோக்கம் சனல் 4 தொலைக்காட்சியினால் இது வெளிச்சத்திற்கு வந்தது என்று சில தூங்கிக்கொண்டிருக்கும் எம்.பி.க்கள் சொல்கிறார்கள். இந்த ஈஸ்டர்

தாக்குதலின் உண்மை மற்றும் சூத்திரதாரி குறித்து முழு நாடும் விழிப்புடன் இருக்கின்றது. எனவே, செனல் 4 பற்றி நாங்கள் கூறத்தேவை இல்லை. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதன் சூத்திரதாரி மற்றும் உண்மை பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து பேசியுள்ளோம்.

இவ்வாறான தாக்குதல் அமெரிக்காவிலும் இடம்பெற்றது. இது அல்-கொய்தா 9 /11 தாக்குதல் என்று அழைக்கப்பட்டது. 9 /11 அறிக்கை என்னிடம் உள்ளன என்பதை கௌரவ சபாநாயகருக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் அமெரிக்கன் அல்ல. நான் இலங்கையன் இந்த ஆணைக்குழு அறிக்கையில் அமெரிக்கா எதையும் தணிக்கை செய்யவில்லை. எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

சபாநாயகரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. இது செனட் தலைவரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. அவ்வாறான பொய்யான நிபந்தனைகள் இந்த பாராளுமன்றத்தில் தான் போடப்பட்டுள்ளது. இது 9 /11 அறிக்கை. யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டது. 9 /11 ஆணைக்குழு கட்டமைப்பு ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மற்றும் குடியரசுக் கட்சியிலிருந்து 5 பேர். சமமாக நியமிக்கப்பட்டனர் ஏன் .

உண்மையை தேட வேண்டும். என்பதற்காகும் அவர்கள் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில், 9/11 அறிக்கையின் விளைவாக ஹோம் லேண்ட் சிக்கியுரிட்டி டிபாட்மென்ட் உருவாக்கப்பட்டது.

உளவுப் பிரிவின் பல்வேறு அம்சங்கள் மீதான விமர்சனம். இருந்த CIA, FBI மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விமர்சிக்கப்பட்டன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

நம் நாட்டில் என்ன நடந்தது? படிப்பினை பெற்றோமா? நம் நாட்டில் தெரிவுக்குழு அறிக்கை உள்ளது. மலல்கொட அறிக்கை. இந்த மலல்கொட அறிக்கையும் மறைக்கப்பட்டது. இது தகவல் அறியும் சட்டத்தினாலேயே வெளியே வந்தது.

அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொகுதி 1 உள்ளது. அதைத் தொட எங்களுக்கு உரிமை இல்லை. அதைப் பார்ப்பதற்கு நூலகத்தின் பின்னால் ஊர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் இன்னும் அதன் பிரதியைப் பெறவில்லை.. எங்களுக்கு 9/ 11 அறிக்கையைப் பெறலாம். 2019ல் நம் நாட்டில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கோ

அல்லது 225 பேருக்கோ முழுமையான அறிக்கையைப் பெற முடியாது. இதுதான் நிலைமை. இது வேடிக்கையானது. ஏன் இவ்வாறான நிலை உருவாக்கப்பட்டது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டு மக்களிடம் இந்த உண்மை யதார்த்தத்தை ஏன் மறைக்க வேண்டும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் மலல்கொட அறிக்கை, தெரிவுக்குழு அறிக்கை, ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்த அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். மேலும் இந்த முயற்சியை கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

இப்போது ஒரு கடுமையான பிரச்சினை உள்ளது பலர் ஏன் உண்மை வெளிவரவில்லை என்று சந்தேகிக்கிறார்கள். எனக்கும் உள்ளது.. சாட்சிகளுடன் சபைக்கு சமர்ப்பியுங்கள் ஏன் இந்த செயற்பாடுகளில் சந்தேகிக்கின்றோம் என இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகிறேன்.

முதல் கேள்வி வவுணதீவு பிரச்சினை

இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2018 நவம்பர் 30, இல் கொல்லப்பட்டனர். விசாரணைகள் டிசம்பர் 1 அன்று தொடங்கியது. டிசம்பர் 3 அரசாங்க உளவுத்துறை தலைவர் ஒரு கல்வெட்டின் பின்னால் ஒரு ஜாக்கெட் இருப்பதாகவும் தேடும்படியும் கேட்டார். அதன் பின்னர், கட்டுவாப்பிட்டி

குண்டுவெடிப்பு குறித்து டிஐஜி எஸ். பி.டி. ஜே. .பி.ஜெயசிங்கவைத் தேடினர். இப்போது அவர் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். டி.ஐ.ஜீ ஒரு நாயைப் பயன்படுத்தினார்.

அந்த நாய் அஜந்தனின் வீட்டிற்கு சென்றது. இது எமக்கு ஜாக்கெட்டை போட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரணத்திற்கு புலிகள் மீது பழி சுமத்தினர். சிஐடி தவறாக வழிநடத்தப்பட்டது. மேலும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் 5 அறிக்கைகள் உள்ளன. 2018 டிசம்பர் 5, 8, 13, மற்றும் 2019 ஜனவரி 3, இல், இந்த 4 அறிக்கைகளிலும் இந்தக் கொலைகள் புலிகளால்

செய்யப்பட்டவை என்று இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு கூறுகிறார். இறுதியில் சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்த அலுவலர்கள்தான் என்பது நிரூபணமானது. இந்த குண்டுவெடிப்பில் இந்த அலுவலர்களை கொன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு

வவுணதீவு பொலிஸ் அலுவலர்களின் கொலைச் சம்பவம் தொடர்பாக சிஐடியை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தவறாக வழிநடத்தியது. இதை விசாரிக்கவும். இது சரியா தவறா என்று

சொல்லுங்கள். நாம் முடிவுகளுக்கு வர முடியாது. நடந்த சம்பவங்களின் சங்கிலித் தொடர் உள்ளது. அதை விசாரிக்க அரசு தயாராக இல்லை.

இரண்டாவது சந்தேகத்திற்குரிய விடயம்

9/11க்குப் பிறகு படிப்பினை பெற்ற நிறுவனங்களில் FBIயும் ஒன்று. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் கணினிகள், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றைச் சரிபார்த்து, அவர்கள் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கிறார்கள். இது இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு

சொந்தமானதும் மற்றும் பயன்படுத்தப்பட்டதுமாகும். பெயர் தெரியவில்லை. கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் தேசிய இராணுவ புலனாய்வு அதிகாரி. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ஐபி முகவரியில் இருந்து சஹ்ரானுக்கு அதிகபட்ச தொலைபேசி அழைப்புகள் இருப்பது தெளிவாகத்

தெரிந்ததாக FBI தெரிவித்தது. ,. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன், சஹ்ரானை நாட்டின் பாதுகாப்புப் படையினர் தேடினர் என நாம் அனைவரும் அறிவோம். சஹ்ரானின் அணிகளைத் தேடினர். ஆனால் சஹ்ரான் இல்லை.

அந்த நேரத்தில், எஃப்பிஐ வழங்கிய ஐபி முகவரியில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் அதிக நேரம் பேசியிருக்கின்றார் என்பது தெளிவாகியது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சூலா கொடிதுவக்கு சொல்கின்றார் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை என்பதால் அவரைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சிஐடியின் எப்.பி தர்ஷிகாவிடம் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரிக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று. இந்த விஷயத்தை நாங்கள் விசாரிக்க வேண்டும். ஆராய வேண்டும்., அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்

மூன்றாவது விடயம்

சொனிக் சொனிக் என்ற விடயம். இந்த பாராளுமன்றத்துக்குள் சொனிக் சொனிக் என்றவர்கள் டானிக் டானிக் அமைச்சுக்களை எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். டானிக் டானிக் அமைச்சை எடுத்துக் கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் இப்போது பெனிக் பெனிக்

ஆகிவிட்டனர். அப்போது, ​​சொனிக் சொனிக் அமைச்சர் பதவி எடுக்க, டானிக் டானிக், இப்போது பெனிக் பெனிக். இது என்ன சொனிக் சொனிக் பிரச்சினை? தெளிவாகச் சொல்வதானால், சிறிய சஹ்ரான் மாத்தளையில் பிடிபடுகின்றார். போலீசார் கைது செய்கின்றனர்.. அவரை சி.ஐ.டி. கைப்பற்றுகின்றனர்.

அவர் பெயர் பஸ்குல் ரஹ்மான். கத்தாரில் உள்ள ஐசிசி குறித்து அவரிடம் விசாரித்த போது சொனிக் சொனிக்குடன் தொடர்புடன் இருந்ததாகவும் இந்த சொனிக் சொனிக் என்ற நபரின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஐபி முகவரியைத் தேடும்போது, ​​​​ அந்த சிப் நகர போக்குவரத்துப் பிரிவின் பெண்

போலீஸ் சார்ஜென்ட் என்பவருடையதாக இருக்கின்றது.. இது தனது சிம் கார்டு என்றும், அதை தனது காதலன் எஸ்ஐ பண்டாரவிடம் (ஐபி அப்போது) கொடுத்ததாகவும் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரி சின்ன சஹ்ரானிடம் கூறுகிறார் பல குண்டுகள் வெடித்தும், இதை ஏன் ஐஎஸ்ஐஎஸ் ஏற்கவில்லை என்று. ஒரு எஸ்ஐஎஸ் அதிகாரி சின்ன சஹரான் போன்ற பயங்கரவாதியிடம் இதை ஐஎஸ்ஐஎஸ்ஸிடம் ஏற்றுக்

கொள்ளுமாறு சொல்வது ஏன்?. இந்த தாக்குதலை ஐஎஸ் நடத்தியது என்பதை ஏற்க வேண்டும். நமது நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதைச் செய்கிறார்.

சின்ன சஹ்ரான் இந்தோனேசியாவுக்குக் கதைத்து கேட்டபோது, ​​பையத் செய்யவில்லையாம் என்று கூறியுள்ளார்… ஆனால் 23ம் திகதி இந்தியாவில் இருந்து சமூக வலைதளங்களுக்கு செல்லுகின்றது.

இந்த உண்மைகளை தேடிப் பார்க்கும் போது, ​​அரச புலனாய்வுப் பிரிவின் டி.ஐ.ஜி சம்பத் லியனகே, “இந்த எஸ்.ஐ. பண்டாரவைக் கேள்வி கேட்காதீர்கள். தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, எனவே இவர்களை விசாரிக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.

நான் யாரையும் குறிவைக்கவில்லை. இது உண்மை. நான் எந்த முன்முடிவுக்கும் வரவில்லை. இந்த சோனிக் சோனிக்கையும் விசாரிக்க வேண்டும். சோனிக் சோனிக்கை பயன்படுத்தி அரசியல் டானிக் அடித்தவர்கள்

இன்று மௌனமாக உள்ளனர். அவர்கள் இன்று இந்த சபையில் இல்லை. அவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் உண்மை வெளிப்படுகிறது. எனவே இதையும் விசாரிக்கவும்.

நான்காவது விடயம்

தாஜ் ஹோட்டலை தகர்க்க வந்த பயங்கரவாதி ஜமீல், அவனது பையையும் டெலிபோனையும் ஒரு மேசையில் வைத்திருக்கிறான். போனை எடுக்கிறார். பேக்கை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் செல்லுகிறான். அதன் பின்னர் தெஹிவளையில் உள்ள ட்ரெபிகல் இன்னுக்கு செல்கிறார். இந்த குண்டுதாரி தனது பையை ட்ரெபிகல் விடுதியில் வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் உள்ள சிகுரிட்டி விசாரிக்கிறார்.

அப்போது குண்டு வெடித்து விடுகின்றது.. அப்போது அவர் சொல்கிறார் மனைவி மீது கோபம் கொண்டதால் தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு மத வழிபாடுகளுக்காக வந்ததாக கூறுகிறார். மனைவியின் தொலைபேசி இலக்கம் கொடுக்கப்படுகின்றது அந்த சிகுரிட்டி முன்னாள் போலீஸ் அதிகாரி. ஜெமிலின் மனைவி அப்போது உண்மையைச் சொல்கின்றார்..

இப்போது பாதுகாப்பு அமைச்சின் இரண்டு அதிகாரிகள் எங்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் சந்தேகத்தை இழந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிக்கு அழைப்பு வருகிறது.ஜமீலின் மனைவி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்துள்ளார். ஜெமிலை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஜெமீல் சென்றுவிட்டதாக கூறுகிறார். பகல் 1.30 மணியளவில், ஜமீல் டிராபிகல் விடுதிக்குச் சென்று தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொள்கின்றார்.

3.30 மணிக்குப் பிறகு, பள்ளி காவலருக்கு வெள்ளவத்தை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு வருகிறது. 5 மணியளவில் பொலிசுக்குச் செல்லும்போது, ​​அங்கு ஜமிலின் மனைவியைச் சந்திக்கச் சென்ற பாதுகாப்பு பிரிவு அலுவர்கள் இருந்துள்ளனர்.

அப்போது இவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என்பது தெளிவாக காவலாளிக்கு தெரியவருகின்றது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஜெமிலின் மனைவி வீட்டுக்கும் வேறு வீட்டுக்கும்

சென்றது ஏன் என்பதுதான். இதில் எது உண்மை? என்ன தொடர்பு அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, புலனாய்வு அதிகாரிகள் அழைக்கப்பட்ட இலக்கங்களை ஆராய்ந்தபோது, ​​சிம் கார்டு சிலோன் ஷிப்பிங் லைன்ஸ், இலக்கம் 88, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 என்ற முகவரியாக இருக்கின்றது.. இந்த சிம்கள் போலி முகவரியில்

வாங்கப்பட்டுள்ளன. இந்த சிம்மை பயன்படுத்தி லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் முன்னெடுக்கப்பட்டமை மிகவும் ஆபத்தான விடயமாகும். கீத் நொயர், எக்னலிகொட, உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய சிம் அட்டைகள் இவை. அன்றும் இந்த முகவரியில்தான் பதிவு செய்யப்பட்டது.

இவை விசாரணையில் தெரியவந்த விடயங்கள் அதனால்தான் நூலகத்தில் மறைத்து வைத்திருக்கின்றனர். சபாநாயகர் அவர்களே, எங்கள் உரிமைகளின் பாதுகாவலர் என்ற வகையில், அவற்றின் அனைத்து பிரதிகளையும் அனைவருக்கும் வழங்குங்கள். மறைக்க வேண்டாம் இந்த நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.

ஜெமீல் தற்கொலை குண்டுதாரி பற்றி இராணுவ உளவுத்துறைக்கு தெரியுமா? வெடிகுண்டு வெடிக்கும் முன் இரண்டு வீடுகளுக்கு எப்படி சென்றீர்கள்? யார் செய்தது? பல்வேறு சாட்சியங்களில் இருந்து கிடைத்த தகவல்களில் இருந்தும் இதைச் சொல்கிறேன்.

நான் சொல்வது 100% சரிதானா என்று தெரிந்து கொள்ளுங்கள். நேற்று தெரிவுக்குழு நிறுவப்படும் என்று கூறப்பட்டது. கேலி செய்ய வேண்டாம். அப்படி நிறுவுவதானால் , 9/11 ஆணைக்குழு போல உறுப்பினர்கள் சமமாக இருக்க வேண்டும். சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அதற்கான முதுகெலும்பு உள்ளதா?

அதே போன்று முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஹீல் டூலின் சகோதரர் பல சந்தர்ப்பங்களில் சகோததர் பற்றி பயப்படுவதாகவும், சகோதரர் தீவிரவாதியாகிவிட்டதாகவும், இதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார்.

அப்படிச் செய்யாவிட்டால் பேரழிவுதான் என்றும் சொல்கின்றார் மஹில் டூல் இது பற்றி அரச உளவுத்துறை தலைவரிடம் கூறுகிறார். ஆனால் கணக்கெடுக்கவில்லை. இதையும் விசாரிக்கவும். உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

ஐந்தாவது விடயம் – சாய்ந்தமருது ஆயுதம்

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகளால் கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் எஸ்ஐஎஸ் சிஐடியை தவறாக வழிநடத்தினர். ஆனால், 2008ல், ஏறாவூர் போலீசில், ஆதம் லெப்பை என்ற ஊர்க்காவலர் உள்ளார். அவருக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் பணிக்கு வரவில்லை, துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை. அது தன் மனைவி வீட்டுக் கூரையில் இருப்பதாகச் சொல்கிறார். சரணடையாததால் மாமனார் கைது செய்யப்படுகிறார். 10 நாட்களுக்குப் பிறகு அவர் வெளியேறுகிறார். ஆதம் லெப்பையினால் வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் அகற்றப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் செயற்கையாக புகுத்தப்பட்டன. இப்போது இது தொடர்பாக வழக்கு விசாரணையில் உள்ளது..

அந்த வழக்கில், முரண்பட்ட சான்றுகள் இருப்பதாக்கூறி. ஆதம் லெப்பை விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றது. 16 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்கே ஒரு ஆயுதம் கிடைக்கின்றது. குண்டுவெடிப்பை சஹ்ரானின் சகோதரர் மற்றும் பெற்றோர் செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆயுதம் ஆதம் லெப்பையின் ஆயுதம் போன்றது. அதனை மேலும் விசாரிக்கும் போது சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதமும், ஆதம் லெப்பையின் ஆயுதமும் ஒன்றே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. அது மட்டும் அல்ல. எனது ஞாபகத்தின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 எமோ கெப்சியுல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தில் அவை இருந்ததாக கூறப்படுகிறது. அவை சாய்ந்தமருது சம்பவத்துடன் தொடர்புள்ள ஆயுதம் என தெரியவருகின்றது. அதனை மேலும் ஆராயும் போது, ​​தனது ஆயுதம் இராணுவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் குழுவினால் அல்லது இராணுவத்தின் உளவுப் பிரிவினால் எடுக்கப்பட்டதாக ஆதம் லெப்பை கூறுகிறார்.

இங்கே கடுமையான சந்தேகம் எழுகின்றது. விசாரியுங்கள். மறைக்க வேண்டாம். ஒரு பாரபட்சமற்ற விசாரணை செய்யுங்கள்.

ஆறாவது விடயம் – அபு ஹிந்த்.

ஹாதியா சஹ்ரானின் மனைவி. சஹ்ரானுக்கு எப்போதும் வீடியோக்களை அனுப்பும் ஒருவர் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரது மாற்றுப்பெயர் அபு ஹிந்த். அவர் பேசும் போது ஹாதியாவை சஹ்ரான் விரட்டி விடுவானாம். குறிப்பாக வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் மரணத்தில் தொடர்புடைய கபூர் மாமா என்ற கடும்போக்குவாதி சொல்கிறான் ஏப்ரல் 16 அன்று மேலிடத்தில் இருந்து சஹ்ரானுக்கு அறிவுறுத்தல் வந்ததாம் அந்த அறிவுறுத்தல்களின்படி, இந்த தாக்குதல் விரைவுபடுத்துமாறு இல்ஹாம் என்ற பயங்கரவாதி கூறுகின்றார். யார் இந்த அபு ஹிந்த் ? , 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது இந்த கோத்தபாய ராஜபக்ச நீதியை நிலைநாட்டுவார் என தெரிவித்தனர். அதனால்தான் இந்த சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்றும் இந்த அபு ஹிந்தை அவர்கள் தேடவில்லை. சஹ்ரானுக்கு மேலே ஒரு சூத்திரதாரி இருந்தார். அந்த நபரின் புனைப்பெயர் அபு ஹிந்த். இந்த அபு ஹிந்தை அடையாளம் காண வேண்டும்.

நவுபர் மௌலவி என்ற சூத்திரதாரி இருப்பதாக.சரத் வீரசேகர கூறினார்..சரத் வீரசேகர கூறும் நவுபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவில்லை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? அபு ஹிந்தைம் தேடுங்கள் என்று சொல்கிறேன்.

ஏழாவது விடயம்- சாரா ஜாஸ்மின்

இந்த குண்டுவெடிப்பில் சஹாரானின் மனைவி ஹாதியா உடனிருந்தார். அந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு சாரா ஜாஸ்மினின் குரல் கேட்டுள்ளது மற்றொரு சாட்சியத்தில், மேலும் இரண்டு பேர் அவளை தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாரா ஜாஸ்மினை பைக்கில் ஏற்றிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியான ஏஎஸ்பி மாஹின்கந்த கூறுகின்றார் சீசீடீவியை தேடுகின்றனர்.. அபுபக்கர் என்ற ஐ.பி., களவாஞ்சிக்குடி பொலிசார் பிடிக்கின்றனர் சாரா ஜாஸ்மினுக்கு 3 டிஎன்ஏ சோதனைகள் உள்ளன. 1வது நெகடிவ். இறக்கவில்லை உயிருடன். உள்ளார் 16. உடல்கள் நீதிமன்றம் 16 என்று சொல்லுகின்றது. 2வதிலும் இல்லை. ஆனால் திடீரென்று 3வது டெஸ்டில் சாரா. இறந்தார் 16 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டதாக சொன்னால், அத்தியாயம் முடிந்துவிட்டது. உண்மை முடிந்துவிட்டது. இது என்ன பொய்? இறக்கும் வரை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமா?. 1 மற்றும் 2 இல்லை, ஆனால் 3 இல் உள்ளதாம்.. இவை உடல் இல்லாத பிரேத பரிசோதனைகள். யாரை ஏமாற்றுகின்றீர்கள் இது பற்றி விசாரிக்கவும். நாங்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

எட்டாவது விடயம்

கோட்டாபய 2019.11 18 ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22ஆம் திகதி பிரதமர் நியமிக்கப்படுகின்றார் அதற்கு முன்னதாக ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அமைச்சரவையை நியமிப்பதற்கு முன்பே செய்யப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை விசாரித்த 31 பேரை கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம் செய்துள்ளார். அது பொய்யல்ல. இது உண்மை. 700 சிஐடி அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நபர்களின் பெயர்களை சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்

டிஐஜி பி. கே டி பிரியந்தா

SSP ஷானி அபேசேகர

பியசென் அம்பாவில

நுவன் அசங்க

சி.டபிள்யூ விக்கிரமசேகர

ஜே. பி. டி. ஜயசிங்க (இவர் ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்)

ரஞ்சித் வெதசிங்க

டிஎஸ் திசேரா

கலனசிறி

ஹேமந்த குணசேகர

இந்திக்க லொகுஹெட்டி

தர்ஷிகா குமாரி

தனுஜா தமயந்தி

சந்திமா அருமப்பெரும

தீபானி மெணிக்கே

நாமலி ஹெராத்

கிரிதிசிங்க

மாரசிங்க

சாகர கரசிங்கஆராச்சி

எல்லெபோல

நிஷாந்த சில்வா

ஜெயசிங்க

இளங்கசிங்க

பசீர்

மெண்டிஸ் பிரேமகுமார

ஜகத்

லக்மல்

விஜிதா

ராஜபக்ச

இவர்கள்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை செய்த 31 பேர். இது மிகவும் சந்தேகத்திற்குரியது. கோத்தபாய ஏன் அவ்வாறு செய்தார்? இதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய வேண்டும்.

இன்னும் முக்கியமான விடயங்கள் உள்ளன. ஏப்ரல் 4 கலனிகம நுழைவாயிலுக்கு ஒரு லொறி வந்தது. இதற்கு முன் டபல் கெப் மற்றும் V8 வாகனமும் வருகிறது. நான் சொல்வதற்குப் பயப்படவில்லை. விசாரிக்கவும். 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைகளில் இரத்தத்துடன் மறைக்க வராதீர்கள்.

சரத் ​​வீரசேகர ஏன் இந்த லொரி பற்றி பேசும்போது நடுவில் குதித்தார். யார் பாதுகாக்கப்படுகிறார்கள்? நுழைவு வாயிலில் உள்ள அதிகாரிகள் ஒரு மணி நேரம் லாரி மற்றும் கெப் வண்டியை நிறுத்துகின்றனர். இந்த லொரியை விடுவிக்குமாறு மேல்மாகாண டி.ஐ.ஜி. ஒருவர் கூறுகின்றார். இந்த வெடிகுண்டு பாணந்துறையில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் சுட்டிக் காட்டவில்லை. விசாரிக்கவும். லொரியை விடுவித்தவர்கள் குறித்த பதிவுகள் உள்ளன. இதை விசாரிக்கவும்.

ரவி செனவிரத்ன ஒரு சிறந்த சிரேஷ்ட டி.ஐ.ஜி. அவர் TNL க்கு ஒரு தெளிவான அறிக்கையை வழங்குகிறார். இதை விசாரிக்கவும்.ஏப்ரல் 5 முதல் 2-0 வரை வாட்ஸ்அப் மெசேஜ்கள் 2 இந்திய கவுண்டர்பார்ட் ஏஜென்சிகளில் இருந்து வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணம் என்னவென்றால், தற்போது அந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன .கணினி நீக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் இல்லை. குறைந்தபட்சம் என்ன அடிப்படையில் உளவுத்துறைக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும்? இந்த தகவலை யார் கொடுத்தது என்று கண்டுபிடித்து உண்மையை சொல்லுங்கள். தனிப்பட்டவாறு நாங்கள் பொறுப்புகளை சுமத்தவில்லை. பாரபட்சமற்ற விசாரணைக்குப் பிறகு பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு தேவைப்படுகிறது. மேலும், ஹாதியாவை அழைத்துச் சென்ற ஜெயசிங்க என்ற அதிகாரி மர்மமான முறையில் கோவிட் பாதிப்பால் இறந்தார் எரிக்கப்பட்டார் எரித்தால் எல்லாம் முடிந்து விடும். சாட்சி இல்லை. பொருட்களும் இல்லை. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதையும் தேடுங்கள்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் கலந்துரையாடும் போது புலனாய்வுப் பிரிவினரும் அண்மையில் இருந்து வருகி்ன்றார்களாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஏன் அப்படி வருகிறார்கள்? இங்கே உளவுப் பிரிவுக்கு என்ன வேலை? உளவுத்துறையில் அனைவரும் இல்லை. கொஞ்சம் பேர் வந்து மூக்கை நுழைக்கின்றார்கள். இதைப் பற்றி விசாரியுங்கள். நடப்பவை அனைத்தும் உளவுத்துறை தலைவருக்கு வாரந்தோறும் செல்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். விசாரிக்கவும்.

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத்குமார என்பதனால் தொலைபேசியும் கணினியும் ரீசெட் செய்யப்பட்டு நீக்கப்பட்டன. அதுதான் யதார்த்தம்.

இன்று பல விடயங்ளை முன்வைத்தேன். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகளை ஆராயுங்கள். அரசியல் ஆதாயம் எங்களுக்கு தேவை இல்லை. நமக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நேற்று பொய்யொன்றை கூறினார். கர்தினால் இது பற்றி தெரிந்திருந்ததாகவும். கார்தினாலிடம் MSD பாதுகாப்புத் துறை கூறியதாம். அது ஒரு பொய். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கர்தினாலுக்கு MSD பாதுகாப்பு வழங்கப்பட்டது.. எனவே பொய்களை பரப்ப வேண்டாம். மேலும், புலனாய்வு அமைப்புகளினால் கர்த்தினாலுக்கு ஆபத்துகள் குறித்து தெரிவித்த கடிதத்தின் பிரதியை சபா பீடத்தில் வைக்குமாறு பிரதமரை கேட்கின்றேன். கார்டினாலிடம் தெளிவாகக் கேட்கிறார். கொடுத்த MSD .யார் என்று யார் தலைவர் சபாபீடத்தில். சமர்ப்பிக்கவும் பெயரைச் சொல்லுங்கள். கர்தினாலுக்குகு இந்த பாதுகாப்பு எப்பொழுது முதல் கொடுக்கப்பட்டது? இதற்கு பதில்கள் தேவை.

கர்தினாலுக்கு அரசு உறுப்பினர்கள் குண்டர்களைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசக் கூடாது என்று நான் கூறுகிறேன். நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். மேலும் இந்த சபையில் இன்னும் சில விடயங்கள் உள்ளன. ரவி செனவிரத்ன ஒரு நேர்மையான, ஒழுக்கமான டி.ஐ.ஜி. அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நான் கோருகிறேன். ஷானி அபேசேகர பற்றி ஒவ்வொன்றாக சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஷானி பிடிபட்டார் என்றும் பொய்யான சாட்சியம் அளித்தார் என்றும் ஒருவர் கூறுகிறார். 10 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பிணை கிடைத்தது. அந்தத் தீர்ப்பை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்.. இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கனம் நீதிமன்றம் கூறுகிறது. இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் பற்றியது. ஷானி அபேசேகரவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு நேர்மையான போலீஸ் அதிகாரி ஏன் வேட்டையாடப்படுகிறார்? கோட்டாபய இந்த வேட்டையை ஆரம்பித்தார். மேலும் ஷானி அபேசேகர பற்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறுகிறது. அவருக்கு அனைத்து நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் ஓய்வூதியம் வழங்கவும் என்று, மோசடிக்காரர் ஒருவருக்கு இவற்றைக் கொடுக்கும்படி பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்காது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவற்றை மிக விரைவில் கொடுக்கவும்.

ஷானி அபேசேகர மற்றும் ஏனையோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கம்பஹா நீதிமன்றத்தில். இதனை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன். சானி நாட்டை விட்டு ஓட மாட்டார். போலிக் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். அவதூறு பேசாதீர்கள்

எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். பயங்கரவாதத் தலைவர்கள் தங்களைத் தாங்களே கொல்ல மாட்டார்கள். அது உண்மை. சஹரானுக்கும் மேல் ஒருவர் இருந்தார். அவர்தான் அபு ஹிந்த். நான் யாரையும் அவமதிப்பதில்லை. இந்த உண்மையைக் கண்டுபிடிக்க தாமதமாக வேண்டாம் .இந்த அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது என்று நான் கூறுகிறேன்..

அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுவது யார்? எனக்கே வெட்கமாக இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையிடம் ஏராளமான பணம் இருப்பதாக ஒரு கத்தோலிக்க எம்.பி. கூறுகிறார் அந்த மனிதனுக்கு வெட்கமில்லை. வாக்குக்காக, ஈஸ்டர் தாக்குதலை விற்பனை செய்தார்கள் . ஒரு கத்தோலிக்கராக இருந்து கொண்டு கத்தோலிக்க திருச்சபையிடம் பணம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நானும் பொறுப்பை ஏற்கிறேன் யாரும் கை கழுவ முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் வழங்கப்படுமாம். ஒரு உயிரின் மதிப்பு 10 இலட்சம். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக பாடுபட எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த விடயங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டறிய இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையைத் தேடுவதற்கு ஊழலற்ற ஒரு முறை தேவை. அதற்கான உள்ளூர் பொறிமுறை உள்ளதா? உண்மையில் து{ய்மையாக எதுவும் இல்லை. நான் சர்வதேச விசாரணைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அனைத்து உள்ளூர் முறைகளும் ஊழல் நிறைந்தவை. எனவே சர்வதேச விசாரணை தேவை. முதுகெலும்பு இல்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் செய்து காட்டுவோம். ஆனால் அரசியல் வேட்டையாட மாட்டோம். சாட்சிகளை மறைக்க மாட்டோம்.. அரசியல் எதிர்த் தரப்புக்கு தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்க மாட்டோம். இன்று நான் உண்மையைக் கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கிறேன். நானும் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அதனால்தான் இன்று இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.