72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
Spread the love

72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

72 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(17) காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராகவே பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(16) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன.

72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இந்தநிலையில்,சுகாதார ஊழியர்களுக்கு நீதி கோரி சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் அடையாள வேலைநிறுத்தத்துடன் இணைந்து இன்று (16) காலை சுகாதார ஊழியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலின் முன்னேற்றத்திற்கு அமைய அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.