65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி

Spread the love

65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும்

செலுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25இ000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும்.

நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50இ000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை எதிர்வரும் புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

    Leave a Reply