1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

Spread the love

1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்

மராட்டிய மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திருக்கோவிலூருக்கு 1,300 கி.மீ. நடந்தே வந்த வாலிபரை குடும்பத்தார் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்.

16 நாளில் 1,300 கி.மீ. நடந்தே ஊருக்கு வந்த திருக்கோவிலூர் வாலிபர்


முகையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொல்லூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் மராட்டிய

    மாநிலம் உஷா நகரில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக

    அங்கு வேலை இன்றி தவித்தார். உணவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு பயணிக்க முடிவு செய்தார். அதன்படி சதீஷ்குமார் கடந்த

    14-ந் தேதி சொந்த ஊருக்கு நடக்க தொடங்கினார். ஐதராபாத், பெங்களூரு வழியாக இரவு-பகல் என பாராமல் நடந்தே வந்தார்.

    அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தன்னார்வலர்கள், போலீசார் உணவு வழங்கினார்கள்.

    நேற்று காலை சதீஷ்குமார் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து திருக்கோவிலூர் நோக்கி நடந்து வந்து

    கொண்டிருந்தார். வரும் வழியில் வெறையூர் போலீசார் சதீஷ் குமாரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

    வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவரை ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-.வுக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்முடி பேசியதால் சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டார்.

    இது குறித்து உடனடியாக செல்போன் மூலம் சதீஷ்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொல்லூர் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெறையூர்

    கிராமத்துக்கு உறவினர்கள் விரைந்தனர். அங்கிருந்த சதீஷ் குமாரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை பார்த்ததும்

    குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர். இவர் 16 நாட்களில் 1,300 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்ததாக தெரிவித்தார்

    1 300 கி மீ நடந்தே ஊருக்கு
    1 300 கி மீ நடந்தே ஊருக்கு

        Leave a Reply