நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Spread the love

நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்

உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள

திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை

    கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன

    என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து

    உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200

    விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்

    விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

    நிவாரணம் வழங்குவதற்கு
    நிவாரணம் வழங்குவதற்கு

        Leave a Reply