வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
Spread the love

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம் ,அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்தில் குறித்த வீது சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.

இதேவேளை, அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

இலங்கையை இவ்வாறான புயல் தாக்கும் என காலநிலை அவதான நிலையம் அவதானித்து எச்சரித்த பொழுதும் இந்த சம்பவம் இடம்பெற்றதள்ளது .

பயன் பெறும் பனை மரங்கள்

மக்கள் அதிக பயன் பெறும் பனை மரங்கள் ,தமிழ் மக்கள் கலை பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றித்து பயணிக்கும் ஒரு காரனையாகி மாற்றம் பெற்றுள்ளது .

அவ்வாறான பனை மரங்கள் ,;தென்னை மரங்கள் என்பன வீடுகளின் அருகில் வளர்க்க படுகின்றன .

இது அறியாமையின் தன்மையா அல்லது ,அதன் விருப்பு நாள் இடம்பெறுவதா என்பதே கேள்வியாக உள்ளது .

இந்த பனை மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகவே காணப்படுகின்றன .