மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
Spread the love

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி ,நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

வீசிய கடும் காற்றினால்

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக இலங்கை நாடு தழுவிய நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதிகள் ,வீடுகள் மேலே மரங்கள் முறிந்து விழும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றன .

அபாயம் நிறைந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட மக்கள் தயக்கம் அல்லது அலட்சியம் அற்று காணப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என படுகிறது .