வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

Spread the love

வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

அணுகுண்டு சோதனை

இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

-வன்னி மைந்தன் –

Leave a Reply