5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது

Spread the love

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணி: இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது.

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஐயாயிரம் ரூபாவை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது.

கொரோனா வைரசு தொற்றினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது

இதன் கீழ் இதுவரையில் 12 லட்சத்து 33 ஆயிரத்து 55 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளைச் சந்திப்பதன் மூலம் இதனை பெறுவதற்கு தகுதியானவர்கள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும். 30 லட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வுள்ளது..

இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கேகாலை மாவட்டத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுகிறது. கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள நான்கு லட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் சமுர்த்தி அலுவலகங்களின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. களுத்துறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.

    Leave a Reply