ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

Spread the love

ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply