யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

Spread the love

யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

யாழ்ப்பாணம் மீசாலை டச்சு வீதி ஊடாக பயணித்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்த திருடர்கள் அறுத்து கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்

தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண்ணை அவதானித்து பின் தொடர்ந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த திருடர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்


சங்கிலியை பறி கொடுத்த தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட பொலிசார் குறித்த திருடர்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் நாள் தோறும் இவ்விதமான மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி தங்க சங்கிலி அறுப்பு கொள்ளைகள் அதிகரித்துள்ளன ,

காவல்துறையினருக்கு இவ்வாறான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கின்ற பொழுதும் அதனை தடுத்திடாது மேலும் திருட்டுகளை ஊக்குவிக்கின்றார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த தப்பிய திருடர்கள் தொடர்பான செய்தி காட்டு தீயாகி பரவியதால் மக்கள் குழு ஒன்று திடீர் வீதி சுற்று காவல் பணிய ஈடுபட்டது ,ஆனால் அங்கு சந்தேங்கத்திற்கு இடமான முறையில் எவரும் தென்படவில்லை

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இவ்வாறான அச்சுறுத்தும் தங்க நகை கொள்ளை சம்பவங்கள் திருடர்களினால் மேற்கொள்ள பட்டு வருகிறது என்கின்ற குற்றவியல் தொடர்பு புள்ளி விபரங்கள் அதிகரித்து காணப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் இவ்விதமான திருட்டு சம்பவங்களை கட்டு படுத்த பொலிசார் மற்றும் மக்கள் விழிப்புற்று முன் வந்தால் மட்டுமே இந்த திருடர்கள் வசம் இருந்து தமது பொருட்களையும் ,மனித உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பது பொது விதியாக உள்ளது

நாள் தோறும் இடம் பெறும் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் சிக்கி பல மக்கள் தமது உடமைகளை பறிகொடுத்து துயர் தோய்ந்த நிலையோடு வீடு சென்றமை துன்பியல் வரலாறாக தொடர்கிறது

போதை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,

மக்கள் வெளியில் உலாவும் போது அல்லது செல்லும் பொழுது தங்க நகைகள் அணிந்து செல்லாது செல்வதே தற்கால நிலையில் சிறப்பான ஒன்று என்பது பொலிசாரின் வேண்டுதலாகும் .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply