ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

ரயில் மோதி வாலிபன் மரணம்
Spread the love

ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததற்காக, மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக சீல் வைக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலையை ஆய்வு செய்திருந்தனர்.

ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

இதன்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததாக மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ