ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்

Spread the love

ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.

இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை

சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது

இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில்

பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது.

அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன.

இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது.

அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று.

சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர்.

அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால்

இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில்

ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது.

இப்போது மீண்டும் மழை பெய்து ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

Leave a Reply