ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

Spread the love

ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்

வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்

‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.

ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்

என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.

இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்

இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது

இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது

இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்

இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply