யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை

Spread the love

யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை

யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு 10,940 மாணவர்கள் சுகாதார

நடைமுறையினை பேணி தேற்றியுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

86 பரீட்சை நிலையங்கள் மற்றும் 18 பரீட்சை இணைப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள் சுகாதார

நடைமுறைகளுடன் சமூக இடைவெளியினை பேணி பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுள் புங்குடுதீவு பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் உயர்தர

பரீட்சாத்திகளாவர். இவர்கள் இருவருக்கும் வேலணை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்குரிய

ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, குறித்த இரண்டு மாணவர்களும் தனித்தனி வகுப்பறைகளில் தமது பரீட்சையினை எழுதுவதற்கான

ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் வேலணை மத்திய கல்லூரி மாணவர் விடுதியில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை உயர்தரப் பரீட்சையிலே வடக்கு மாகாணத்தில் 166 பரீட்சை நிலையங்களில் இருந்து 20,325 மாணவர்கள்

தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply