யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Spread the love

யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு

யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்

செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கான சந்தை விலையினை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையினைமீறி பொருட்களை விற்றமை, ஏமாற்றும் நோக்கோடு

பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை, நிறை குறைவாக பாண் விற்பனை செய்தமை மற்றும் உற்பத்தி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார் .