பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை
Spread the love

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் ஒருவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக் இதை தெரிவித்தார்.

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புதன்கிழமை (16) பொது மக்களால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி எம்.எஸ். அப்துல் சமட் தலைமையிலான பொதுச் சுகாதார

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இறைச்சியை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

பாவனைக்குதவாத மாட்டிறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட மாட்டிறையும் அழித்ததாக தெரிவித்தார் .