மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க
Spread the love

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க.


மொறு மொறு வெங்காய சமோசா ,எண்ணெய் குடிக்காது இன்றே ஈசியா செய்ங்க.இப்படி ஒரு சமோசா ஈசியாக செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதிகம் இந்தியா மக்களிடத்தில் பிரபலமானது இந்த சமோசா .

லண்டன் ,கனடா ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ,ரயில்வே நிலையங்களில் ,இந்தியர்கள் கடையில் அதிகமாக விற்பனையாகிறது .

யாராச்சும் விடுமுறைக்கு செல்லும் பொழுது இதனை அவதானிக்கலாம் .வெள்ளையர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்து வாங்கி செல்வதை காணமுடிகிறது .

மொறு மொறு வெங்காய சமோசா எண்ணெய் குடிக்காது ஈசியா செய்ங்க

செய்முறை ஒன்று

இந்த சமோசா செய்திட இரண்டு கப் மைதா மா எடுத்திடுங்க .தேவையான அளவு உப்பு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி எண்ணெய் ,சேர்த்து நன்றாக குழைத்திடுங்க .

நன்றாக சப்பாத்தி போல பதத்திற்கு வந்துள்ளது .இந்த மாவை மூடி போட்டு மூடி ,ஒரு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

மாவு நன்றாக சாப்டாக இருக்கு .இப்போ வெறும் மாவு சேர்த்து நன்றாக பிசைந்திடுங்க .

மாவனாது பாத்திரத்தில் ஓட்டாத பதம் வரும் வரைக்கும், நன்றாக பிசைந்து எடுங்க .

இந்த மாவை பூரி கட்டையில் வைத்து நன்றாக அழுத்தி எடுங்க .அழுத்திய பின்னர் சின்ன சின்ன துண்டுகள அந்த மாவை எடுத்திடுங்க .

இப்போ இந்த உருண்டைகளை பூரி கட்டையில் வைத்து அழுத்தி சப்பாத்தி போல எடுத்திடுங்க .இப்போ கடாயில இரண்டு பக்கமும் மெல்லியதாய் வேகவைத்து எடுத்திடுங்க .

இப்போ சமோசா சீட்டு நாங்க செய்தாச்சு .
செய் முறை இரண்டு

இப்போ இந்த வேகவைத்த சமோசா சீட்டை, சதுர வடிவில் வெட்டி எடுத்திடுங்க .அப்புறம் அந்த சதுரம் வெட்டியை சீட்டை மீளவும் நடுவில் வெட்டி இரண்டாக்கிடுங்க .

சதுரமாக வெட்டியா மாவின் கழிவுகளை .இப்போ பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதற்குள் அவற்றை பொரித்து எடுத்திடுங்க .
நன்றாக மொறு மொறு பதத்தில் பொரித்து எடுங்க .இவ்வாறு பொரித்ததை தனியாக எடுத்து வைத்திடுங்க .

இப்போ நாங்க சட்னி ரெடி பண்ண போறம் .ஒரு கப் அளவு வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .
பொரித்து வைத்த கழிவுகளையும் இந்த் வெங்காயத்துடன் சேர்த்திடுங்க .இது கூட அரை கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி சீராக தூள் ,உப்பு ,கூடவே சக்கரையும் சேர்த்திடுங்க
யாவும் சேர்த்த பின்னர் நன்றாக மிக்ஸ் பண்ணிடுங்க .மசாலா ஒன்றுடன் ஒன்று நன்றாக ஓட்டணும் .

அதுவரைக்கும் நன்றாக பிசைந்து கொள்ளுங்க .
அடுத்து நாங்க ஒரு பேஸ்ட் தயார் செய்ய போகிறோம் .கொஞசகமாக மை தா மா சேர்க்க போகிறோம் .

இரண்டு கரண்டி மைதா மா எடுத்திருக்கோம் .
இது கூடவே கொஞ்சமாக தண்ணீர் கலந்திடுங்க .கட்டியான மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்க .

அப்போ தான் சமோசா சீட் நன்றாக ஒட்டி பிடிக்கும் .இந்த பேஸ்ட் நாம் ஒரு பசை போல பாவிக்க போகிறோம்

இப்போ சமோசா ரெடி பண்ண போகிறோம் ,சமோசா சீட்டில் இந்த பசையை தடவி கொள்ளுங்க .

இப்போ முக்கோண வடிவிலே மடித்திட்டு ,இப்போ சட்னி அதற்குள்ள வைத்து இப்போ பசையை ஒட்டி மூடிடுங்க .

இப்போ சமோசா மாதிரி நமக்கு கிடைத்திடும் ,இப்போ என்னை நன்றாக சூடாக இருக்கு ,அதில் பொறித்திடுங்க .

நன்றாக பொரிந்து வந்த பின்னர் அதனை எடுத்திடுங்க .
இரண்டு பக்கமும் பிரட்டி விட்டு வேக வைத்து, நன்றாக மொறு மொறுவாக பொரித்து எடுத்திடுங்க.

இப்போ சமோசா ரெடியாகிடிச்சு .இதுபோல நீங்களும் வீட்டில செய்து சாப்பிடுங்க.
நம்ம சமையல் கலை நிபுணர் செமையாக சமோசா, மொறு மொறுவாக செய்துள்ளங்க .செமையான சமோசா ரெடியாடிச்சு

லண்டன் ,கனடா அமெரிக்காசுக்கு ஏற்றுமதி செய்து வித்திடலாமா நண்பர்களே .

Leave a Reply