காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

ல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Spread the love

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே சுலபமா செய்ங்க

காளான் மசாலா இட்லி தோசைக்கு வீட்லேயே மிக சுலபமா செய்ங்க
.இந்த காளான் மசாலா எப்படி செய்வது என்கின்ற உங்கள் சந்தேகம் இதில நீக்க படுகிறது .

காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஒரு உணவு .
இவ்வகையான காளான் சுவையாக சமைத்தால் , இட்லி தோசை சோறு கூட ,சாப்பிட ரெம்பவே சுவையாக இருக்கும் .அப்படியான காளான் சமையல் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

வீட்டில் காளான் மசாலா செய்வது எப்படி …?
இந்த காளான் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க இப்போ காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

இவ்வகையான காளான் மசாலா செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு,
பொடியாக வெட்டிய முட்டைகோஸ் எடுத்திருங்க .
முட்டை கோஸ் வெட்டிய பின்னர் ,அதனை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்திருங்க .

வெட்டிய வெங்காயம் 200 கிராம் எடுத்திருங்க .
ஒருகரண்டி மிளகாய் தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,
தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,
அரை கப் அளவு மைதா மா ,அரை கப் அளவு சோளம் மா சேர்த்திடுங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க .
இந்த மா எல்லா பொருளுடனும் நன்றாக ஒன்றோட ஒன்று ஓட்டணும் .
அப்படி நன்றாக கலந்திருங்க .

மா கலந்த பின்னர் ,தேவையான அளவு தண்ணீர் எடுத்திருங்க .இப்போ கிரேவியோட அந்த மா எல்லாத்தையும் சேர்த்து பிசைந்து கலக்கிடுங்க .
இந்த காளான் மசாலா ரெம்பவே திக்காகவும் ,தண்ணி தன்மையாகவும் இருக்க கூடாது .அதற்கு ஏற்ப இதனை கலந்திருங்க .

செய்முறை இரண்டு

இப்பபோ அடுப்பில பாத்திரம் வைத்திருங்க ,அதில தேவையான எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் சூடானதும் ,பாவோடா அளவில இந்த கலவையை ,துண்டு துண்டாக போடுங்க .

பாவோடா காளான் மசாலா பொன்னிறமா வந்த பின்னர் வெளியில் எடுத்திருங்க .வெளியில் எடுத்தவுடன் ,அதனை ருசு பேப்பரில் போடுங்க .ஏன் என்றால் எண்ணையை அந்த ருசி விலக்கிடும் .

இப்போ இதை ஓரமா வைத்திருங்க ,இப்போ காளானுக்கு நாங்க கிரேவி செய்திடலாம் வாங்க .

இப்போ கடாயில் என்னை ஊற்றி ,அதில வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயத்தை நன்றாக வதக்கி வாங்க ,இப்போ இது கூட ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .
ஒரு மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திட்டு .நன்றாக வதக்கி கொள்ளுங்க .

இஞ்சை பூண்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க .அடுத்து இதில் ஒரு கரண்டி உப்பு சேர்த்து கொள்ளுங்க .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,
அரை கரண்டி மஞ்சள் ,அரை கரண்டி மிளகு தூள் ,இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்குங்க .

அடுத்து இது கூட ஒரு கரண்டி சோயா சோஸ் ,
ஒரு கரண்டி வினிகர் ,மூண்டு கரண்டி தக்காளி சோஸ் ,சேர்த்திட்டு நன்றாக வதக்கி வாங்க .
அடுத்து ஒரு கப் எடுத்து கொள்ளுங்க ,அதில இரண்டு கரண்டி சோளம் போடுங்க .கிரேவி திக்கா வருவதற்கு இந்த சோளம் மா உதவுகிறது .

இப்போ சோளம் மாவிலை ஒரு கப் தண்ணீர் கலந்து ,நன்றாக கலக்கிடுங்க .கட்டி இல்லாம நன்றாக கலக்கிடுங்க .
இப்படி செய்த பின்னர் ,இந்த சோளம் மா கலவையை, செய்து கொண்டிருக்கும் கிரேவியில ஊற்றி கலக்கிடுங்க .

சோளம் மா கலவை கலந்ததன் பின்னர், கிரேவியில் தண்ணி கொஞ்சம் கலந்திடுங்க .
நன்றாக கொதித்த பின்னர் நாம் பொரித்து வைத்த பாவோட காளான் போட்டிருங்க .
இப்போ நன்றாக கிரேவியோட நன்றாக வேகவைத்து கலக்கி வாங்க .ஒன்றோட ஒன்று நாசியும் வர நசிச்சு கலக்கிடுங்க .நலல மசிச்சு கிரேவியோட சேர்ந்த பின்னர் இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

இப்போ சுவையான காளான் மசலா ரெடியாகிடிச்சு .

கடைகளில் விற்பனை செய்யும் அதே ரகத்தில் இந்த காளான் மசாலா நமக்கு கிடைத்தாச்சு .
இப்போ இந்த காளான் மசாலா கூட தோசை ,இட்லி சாதம் சேர்த்து சாப்பிட்டா பாருங்க ரெம்பவே அருமையாக இருக்கும் .
ஒருமுறை சாப்பிட்டவங்க மறுமுறை தேடி வரவழைக்கும் ,இந்த வீட்டு காளான் மசாலா சமையல் .

இப்போ சொல்லுங்க மக்களே சுவை எப்படி இருக்கு .தலைவரே அமெரிக்கா போயிட்டு வந்த பீலிங் வருகுதா ..?

Leave a Reply