முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
Spread the love

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு செமையாக இருக்கும் .


முள்ளங்கி செமையான சுவையுடன், இலகுவாக செய்வது எப்படி என்பதை வாங்க இதில பார்க்கலாம் .

முள்ளங்கி துவையல் செய்வது எப்படி ..?

அடுப்பில கடாயா வைத்து ,அதில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் ,ஒன்றரை மேசை கரண்டி அளவு மல்லி ,எட்டு வறு மிளகாய் ,இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க.

அதன் பின்னர் சீரகம் சேர்த்து வறுத்துட்டு .
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்க .

அப்புறம் அதே கடாயில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் .300 கிராம் வெட்டிய முள்ளங்கியை வெட்டி நன்றாக வதக்கி வாங்க .

முள்ளங்கி கலர் மாறி வந்ததும் ,ஆறு பல் பூண்டு ,பொடியாக வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ,கருவேப்பிலை ,புளி சேர்த்திடுங்க .புளியை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ இது கூட தேவையான உப்பு சேர்த்து வதக்கி வாங்க ,வதங்கிய பின்னர் அடுப்பை நிப்பாட்டிடுங்க .

மல்லி மற்றும் ,முள்ளங்கி எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .

இப்போ அருமையான முள்ளங்கி துவையல் ரெடியாகிடிச்சு .இதனை இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாக இருக்கும் மக்களே .

வீட்டில் செஞ்சு அசத்துங்க .

Leave a Reply