மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Spread the love

மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, அலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை

பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் போக்குவரத்து நடைமுறைகளை மீறி உள் வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.