மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு

மலையக தோட்ட தொழிலார்களுக்கு 1700 சம்பளம் உயர்வு
Spread the love

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு உடபுஸ்லாவை கோட் லோச் தோட்டத்திற்கு பயணித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரித்துள்ளார் .

ஜீவன் தொண்டமான் அறிவித்தது போன்று 1700 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக பேச படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

கொழும்புக்கு ஜீவன் தொண்டைமானை அழைத்து நான் பேச உள்ளேன் .அதன் பொழுது மலையக தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பேசி நல்ல முடிவை எடுப்பேன் என மக்களுக்கு தெரிவித்தார் .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்போது அரசியல் காட்சிகள் வாக்குறுதிகளை அடித்து விடுகின்றனர் .

வாக்கு பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னர் மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல் கோமாளிகாக ,இலங்கை அரசியல் மாறி செல்கிறது .

அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகள் அவர்கள் வளர்ச்சி நிலை தொடர்பாக சிந்திக்க மறுக்கும் மலையக அரசியல் காட்சிகள் ,என்று அந்த மக்களுக்குரிய சிறந்த வாழ்வை கொடுக்க போகின்றார்கள் என மலையக தோட்ட தொழிலாளர்கள் ஏங்கி நிற்கின்றனர் .

நூறு ஆண்டுகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே காண படுகின்றனர் .

ஒழுங்கான வீதி வீடுகள் ,கல்வி கூடங்கள் ,கழிவறைகள் ஏதும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர் .

இந்த மக்களுக்கு ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நல்லதை செய்து கொடுக்க மாட்டாரா என அந்த மக்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர் .

இளம் வயதில் இலங்கை அரசியலில் கால் ஊன்றியுள்ள ஜீவன் தொண்டமான், மக்கள் மனங்களை வென்று நல்லாட்சி கொடுப்பாரா மலையக தோட்ட தொழிலாளர்கள் வாழ்வில் விடியல் பிறக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .