மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்

Spread the love

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்

முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

மலையகத்தின் கல்வி வளர்ச்சி முன்னொரு போதும் இல்லாத வகையில் தற்போது வெற்றி பாதையில்

முன்னோக்கி செல்கின்றது. அதற்கு அன்மையில் வந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளும் பெரும்

எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி உள்ளமை அதனை நிரூபித்து காட்டியுள்ளது.

இந்த வெற்றிகளின் பின்னணியில் மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் முன்பள்ளிகளும்

இருந்துள்ளன. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியில் அனைவரும் முன் நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்

முன்னால் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின்

தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை தோட்டம் கோர்ட்லொஜ் பிரிவில் நடைபெற்ற முன்பள்ளி சிறரர்களின் பொங்கள்

விழாவில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் தோட்ட

முகாமையாளர்¸ தோட்ட அதிகாரிகள்¸ உட்பட தோட்ட பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவன் என்ற ரீதயில் இந்த விடயம் தொடர்பில் பல விடயங்களில்

ஈடுபட்டுள்ளேன். மலேசியாவில் நடைபெற்ற உலக முன்பள்ளி கல்வி மகா நாட்டிலும் கலந்துக்

கொண்டுள்ளேன். நாட்டுக்கு நாடு முன்பள்ளி கல்வியில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் முன்பள்ளி கல்லி 05 வயதிற்கு பின்னரே நடைபெருகின்றது

பாடசாலைக்கு 07 வயதினிலேயே அனுமதிக்கின்றனர். ஆனால் இலங்கையில் அவை சற்று வேறுப்பட்டதாகவே

காணப்படுகின்றது. முன்பள்ளி கல்வி என்பது சிறார்களின் விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலேயே

தங்கியுள்ளது. இதன் ஊடாகவே இவர்களுக்கு கல்வி புகட்டப்படுகின்றன.

அந்த வகையில் மலையக தோட்ட புறங்களில் காணப்படும் முன்பள்ளிகளின் பங்களிப்பு மலையத்தின் கல்வி

வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கி வருகின்றன. இந்த முன் பள்ளிகளை படித்துவிட்டு வீட்டில் முiறான தொழில்

வாய்ப்புக்கள் கிடைக்காதவர்கள் தங்களின் வருமானத்திற்காகவும் சுயதொழிலாக சமூக

சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்களிடம் இருந்தே பணம் பெறப்படுகின்றது. இதனை பெற்றோர்கள்

கட்டாயம் செலுத்த வேண்டும் சில இடங்களில் இவை செலுத்தப்படாததினால் இந்த ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பெற்றோர்கள் இந்த விடயத்தில் கவனமாக இருந்து செயற்பட வேண்டும். கல்விற்காக செலவு செய்வது என்பது சிறார்களுக்கு வங்கியில் சேமிப்பதை விட

பெருமதியானதும் ஒரு சிறந்த மூலதனமுமாகும். இருந்தும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இந்த

தொழிலை ஒரு அரச நியமனமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மேலும் கூறினார்

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு
மலையகத்தின் கல்வி வெற்றிக்கு
மலையகத்தின் கல்வி வெற்றிக்கு

Leave a Reply