மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

Spread the love

மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

வெலிகம பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மற்றொரு நபரைத் தாக்கும்போது அதனைக் கண்டுங்காணாததுபோல வேடிக்கைப் பார்த்த இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பிரதேசத்தில் வைத்து பஸ் சாரதி ஒருவர் அங்கிருந்த மற்றொரு நபரை இரவில் கடுமையாகத் தாக்கியிருந்த நிலையில்,

சம்பவ இடத்திலிருந்த இரு பொலிஸார் அதனை வேடிக்கைப் பார்த்ததோடு, தாக்குதலை தடுக்கத் தவறியமைத் தொடர்பான சிசிடீவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தில்

தாக்குதலை மேற்கொண்ட குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

மேலும் இச்சம்பவம் நடைபெற்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமாக இருந்தால், அதனைத்

தடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. தாக்குதலுக்குள்ளாகும் நபரைக் காப்பாற்ற வேண்டியதும், தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளியை கைது செய்வதும் பொலிஸாரின் பொறுப்பு என்றார்.

எனவே தாக்குதலைத் தடுக்கத் தவறியப் பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றில்

முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply