பூட்டை உடைத்த 2 தேரர்களுக்கும் விளக்கமறியல்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Spread the love

பூட்டை உடைத்த 2 தேரர்களுக்கும் விளக்கமறியல்

பல கோடி ரூபாய் பெறுமதியான, பம்பலப்பிட்டி ஃபரிட் பிளேஸில் உள்ள பழைய இரண்டுமாடிகளைக் கொண்ட வீட்டுக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக்கொண்டு, சட்டவிரோதமான முறையில், உள்நுழைந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்ட பௌத்த தேரர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவ்விருவரும், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, அவ்விருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த தேரரர்களில் ஒருவர், வயது குறைந்தவர் என்பதனால், அவரை நன்னடத்தை நிலையத்தில் தடுத்துவைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

மாலபே பிரதேசத்தில் உள்ள விஹாரையைச் சேர்ந்த தேரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னுடைய வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு, தேரர்கள் இருவர் மற்றும் மற்றொரு நபர், வீட்டுக்குள் பலவந்தமாக தங்கியிருப்பதாக, அந்த வீட்டின் உரிமையாளர் எனக் கூறப்படும் பெண், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் குழு, அப்போது வீட்டிலிருந்த 20 மற்றும் 14 வயதுகளுடைய பௌத்த தேரர்கள் இருவரை கைது செய்தனர்.

இந்த வீடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரியான மூவருக்கு உரித்துடையது. உரிமையாளர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், அற்றோனி தத்துவத்தின் பிரகாரம், வீட்டின் ஒருபகுதியை கொடுத்துள்ளதாகவும் அதனால், வீட்டின் உரிமையாளரின் வீட்டுக்குள் நுழைத்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.