பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா

Spread the love

பூங்காவில் 8 சிங்கத்திற்கு கொரோனா

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வன உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 8 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் உடல்நிலை சீராக உள்ளது. உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு பூங்காவும் மூடிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் (சிசிஎம்பி) ஆலோசகா் ராகேஷ் மிஸ்ரா கூறியது:

சிங்கங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவற்றின் எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு

சிசிஎம்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை முழுமையாக பரிசோதித்தபோது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கொரோனா பரவியிருக்கலாம்.

எனினும் அவை உருமாற்றம் அடைந்த கொரோனா தீநுண்மிகளால் பாதிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காவில் உள்ள பணியாளா்களிடம் இருந்து சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்க

வாய்ப்புள்ளது. மனிதா்களை போல் மிருகங்களும் பாலூட்டிகள் என்பதால் அவையும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவித்தாா்.

இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது

உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Leave a Reply