புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo

Spread the love

புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo

புஸ்ஸல்லாவ நகரத்தின் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து

செல்லப்பட்டு நகரத்துடன் இணைந்ததாக காணப்படும் ஜயரத்ன மாவத்த வட்டகொடபத்தன

கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நகரத்தின் கழிவுநீர் செல்லும் பிராதான ஓடையின் சிறிய பாலம் ஒன்று குப்பைகளினால் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஓடையில் செல்லாமல் பாதையில் செல்வதால் இன் நிலை

தோன்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடபளாத்த பிரதேச சபைக்கு பலமுறை மக்கள் முறைபாடுகள் செய்த போதும் இது வரைக்கும் உரிய நடவடிக்கை மேற்க் கொள்ளபடவில்லை.

நகரத்தில் காணப்படும் கழிவு நீர் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் அனைத்தும் குப்பைகளும் கிராமத்தை சுற்றி காணக் கூடியதாக இருப்பதுடன் டெங்கு போன்ற நோய்கள் பரவு வாய்ப்புகளும் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சத்தில் இருக்கும் இந்த மக்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுவது அவர்களை மேலும் மன உலைச்சளுக்கு உள்ளாக்கி உள்ளது.

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் சமபந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Leave a Reply