புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு

Spread the love

புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு

கொவிட் -19 நோயாளிகளுக்காக இராணுவப் படையினரால் கட்டப்பட்ட புதிய வாட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவினால்

வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேட்டின் 16 வது பொறியியலாளர் சேவைகளின் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த புதிய

விடுதி அனைத்து மருத்துவ வசதிகளுடன் 25 கட்டில்கள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சில நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின்

பேரில் 68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என்.ஹெட்டியராச்சி, 681 வது பிரிகேட் தளபதி

மற்றும் 16 வது பொறியியலாளர் சேவை படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார ஆகியொரின் மேற்பார்வையில் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

    Leave a Reply