பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
Spread the love

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள டிக்டாக் ராசனுடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது

குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு டிக்டாக் ராசனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது,

நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.

நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்துவைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.

பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பபட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.

பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மக்களிடம் உதவி செய்திடபணத்தை பெற்று அது தானே தனது பணத்தினை வழங்குவது போன்ற நிலையில் ,தனனை ஒரு நீதிபதி போல இவர் செயல் படுவதாக தற்போது பலர் மக்கள்குற்றம் சுமத்தியுள்ளனர் .

இவரை ஆதரித்து பேசிய மக்கள் பலர் இவரது இவ்வாறான இவ்விதமான தொடர் இழிவான செயலினால் மக்கள் இவரை வெறுத்து இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர் .

இவ்வாறான உதவி செய்யும் யுடுப்பர் மற்றும் டிக்டாக் வாதிகளுக்கு வெளிநாட்டு மக்கள்பணம் வழங்கிட கூடாது என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

இவர் மீது பல குற்ற சாட்டுக்கள்முன் வைக்க பட்டுள்ளன அவை தொடராக வெளி வரும் என எதிர் பார்க்க படுகிறது .