பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே

Spread the love

பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”

செயற்திட்;டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று கட்டடப்பட்டு அதன் கட்டுமான பனிகள் தற்போது தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளன.

ஹட்டன் கொழும்பு பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த பாடசாலையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தின் அருகில்

பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவிற்கு பாதிப்படைந்தால் இந்த நிர்மாண பனிகள் இடை நிருத்தப்பட்டுள்ளதாக தெரிய

வருகின்றது. இதற்கு பொருப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை உடனடியாக திருத்தி அமைக்குமானால். பாடசாலையின்

கட்டட நிர்மாண பனிகளை முன்னெடுக்க முடியும். மலையக மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கவும் முடியும் இதனை

உணர்ந்து செயற்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். தொடர்ந்து காலநிலை மாற்றங்களால் மேலும் இந்த பிரதேசம்

உடையுமானால் கட்டடம் பாதைக்கே வந்து விடும். இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்டவர்களுக்கு முறைபாடுகள் செய்த போதும்

இதுவரைக்கும் எந்த வித முடிவும் இல்லை. எனவே சம்பந்தபட்டவர்கள் இதற்கான உடனடி தீர்வை எடுப்பார்கள் என தெரிய வருகின்றது

Leave a Reply