நிலாவே நீயா வீழ்ந்தாய்

Spread the love

நிலாவே நீயா வீழ்ந்தாய்

பன்முகத்து ஆளுமையாய்
பாரெங்கும் ஒலித்தவளே
பா முகத்தின் திரைதழுவி
பல கதை சொன்னவளே

இடுப்பின் கீழ் செயல் இழந்தும்
இடராது நடந்தவளே
போர் குணத்து வெறிபிடித்து
புரட்சி பல செய்தவளே

வீடு வந்த வேளையில
விருந்து வைத்து மகிழ்ந்தவளே
ஆர தழுவியென்னை
அன்புருகி நின்றவளே

உந்தன் பிரிவு இன்று
உள்ளமதை வாட்டுதடி
கண்ணில் நீர் வடிய
கலங்கி மனம் துடிக்குதடி

நிலாவே நீ வீழ்வாய் என்று
நியமா நான் நம்பவில்லை
நம்ப முடியா ஒன்றை
நம்பிட ஏன் வைத்தாய் …?

படைக்க பலதிருக்க – நீ
பார் கடந்து பொனதெங்கே …?
விதைத்த பூங்கொடியே
விசாலமாய் உறங்கு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 06-09-2021
http://ethirinews.com/
லண்டனில் –அறிவிப்பாளர் ,பாவலர் ,பன்முக ஆளுமை,.நிலா அக்காவின் மரண துயர் அறிந்த பொழுது
கண்ணீரில் மனம் …

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply