நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.

Spread the love

நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 11 கோடி நிதியுதவி.

வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 11 கோடி ரூபாவுக்கு மேலான தொகைகை வழங்கியுள்ளது.

இந்தத் தொகை ‘மெக்’ என்றழைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பான

உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரும், மெக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் கடந்த புதன்கிழமை கைச்சாத்திட்டார்கள்.

நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த காணிகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்து, மக்களை மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு

உதவியளிப்பது திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் மன்னார், வவுனியா மாவட்டங்களில் எண்ணாயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மெக் நிறுவனம் 2002ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிலக்கண்ணி அகற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 92 சதுர

கிலோ மீற்றர் சதுர பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply