இலங்கையில் 551 பேருக்கு கொரோனா

Spread the love

இலங்கையில் 551 பேருக்கு கொரோனா

இலங்கையில் இன்றைய (25) தினம் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இதற்கமைவாக பேலியகொடை மீன் சந்தை திவுலப்பிட்டிய

சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 771 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 31 ஆயிரத்து 339 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 251 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஒருவரின் உயிரிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை:

ஊடக அறிக்கை

கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன் இ இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 186 ஆகும்.

  1. அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர். அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர்
  2. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 2020 டிசம்பர் 24ஆம் திகதி அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  3. காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான இதய நோய்த்தொற்று நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply