நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Spread the love

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதி முறைக்கேடு , நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

சந்தேக நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தேக நபர் கண்டி – கெண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.