நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்

Spread the love

நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான கலந்துரையாடல்

இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின்

செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி கருத்து தெரிவிக்கவயில் நாட்டில் 90 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளன. இன்னும் சி பகுதியிவுள்ள கண்ணிவெடிகள அகற்ற வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 119.87 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை

அகற்றவேண்டிய நிலை முன்னர் காணப்பட்டது. இதில் 119.13 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இவை அகற்றப்பட்டுள்ளன.

அதன்படி இன்னும் 0.74 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

எஞ்சியுள்ள பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி மக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகற்ற

வேண்டிய நிலப்பரப்பின் உடமை யாருக்குறியது அகற்ற முன்னர் அப்பகுதியில் தொல்பொருளியல் சான்றுகள் உள்ள பிரதேசமா?

உள்ளிட்ட பல விடயங்களை துறைசார் திணைக்களங்களின் ஒருங்கிணைப்போடு ஆராய்ந்து தீர்க்கமான முடிவுக்கு வருவதுடன்

அது தொடர்பில் உரிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கையிடல் வேண்டும்.

அத்துடன் பிரதேச காணி பயன்பாட்டுக்கூட்டத்தில் இவ்விடயங்களை ஆராய்வதுடன் தீர்வு காண முடியாத விடயங்களை மாவட்ட மட்ட கூட்டத்திற்கு கொண்டு வரல்

வேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர்கள் தமது பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டிய இடம் தொடர்பில் பூரண விபரங்களை அறிந்து கொள்வதுடன் குறித்த கிராம

உத்தியோகத்தரும் இதனை தெரிந்திருத்தல் இன்றியமையாயதது.
தொல்பொருளியல் சார் இடங்கள் காணப்படுமாயின் அதனது வரலாற்று முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய தரப்பிற்கு

அதனை அறிவித்து அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றியமையாயதது. எனவே அகற்ற வேண்டிய பிரதேசம்

எந்நிறுவனத்திற்குரியது என்பதனை உரிய துறைசார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று அறிந்து கொண்டு

முறையான அனுமதி மற்றும் பொறிமுறைக்கேற்ப உரிய முறைப்படி வெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க ,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்)

எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க ,திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், பிரதேச

செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

      Leave a Reply