தேர்தலில் பாரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை

Spread the love

தேர்தலில் பாரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை

இன்று நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தெரிவிக்கையில் பாரிய சம்பவங்கள் எதுவும் இதுவரையில் காணக்கூடியதாக இல்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கைகள் பல கோரப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ஏதேனும் அல்லது சிறிய சம்பவங்கள்

பதிவாகியிருந்தால் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான

சுகாதார விதிமுறைகள் தீவிரமாக கடைப்படிக்கப்பட்டது. 70 சதவீதமானோர் வாக்களித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்று மாலை நிறைவடைந்த வாக்களிப்பில் 17 மாவட்டங்களில் 70 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது. இவற்றில்

76 சதவீத வாக்களிப்பு ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்;களில் பதிவாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக அநுராதபுரம், பதுளை, திஹாமடுல்ல, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய

மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply