தெரிந்து செய்

Spread the love

தெரிந்து செய்

ஆடி பறக்கும் பட்டத்திற்கு
ஆணவம் கூடாது
ஆடும் காற்று இல்லை என்றால்
அது வானில் ஏறாது

நூலை பிடித்தும் பயனில்லை
நுணுக்கங்கள் புரிந்து விடு
மேல் என நினைத்து ஆடி விடும்
மேன்மை குறைத்து விடு

குளிர்ச்சி பொழிவது மலைகள் தானே
குமரா புரிந்து விடு
குடி நீரை தருவது அவைதானே
குணத்தினை புரிந்து விடு

நிலமும் உயிரும் வாழ்ந்துவிட
நீரே மூலதனம் -இந்த
நிலைகள் அறிந்திடா வாழ்ந்து விடின்
நீயோர் மூடத்தனம்

உயரம் என்றே நினைத்து
உள்ளம் மகிழாதே – உன்
உண்மை தெரிந்தால்
ஊரே மிதிக்கும் நிலைகள் மறவாதே

வானை முட்டும் மரங்கள் அழிப்பின்
வாழ்வு வாடி விடும்
வாழும் போதே வாழ்ந்திட பழகு
வாழ்வு உயர்ந்து விடும்

வன்னி மைந்தன் – (ஜெகன்)
ஆக்கம் – 08-03-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

ஆணவம்
ஆணவம்

    Leave a Reply