தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்

Spread the love

தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்

இலங்கை மட்டு வாகரை கேணிமடு பகுதியில் உள்ள முஸ்லீம் நபர் ஒருவரது தென்னம் தோட்டத்திற்குள் நுளைந்த காட்டு யானைகள் அங்கிருந்த ஐம்பது தென்னை மரங்களை யானைகள் அழித்துள்ளன

காய்த்து கொண்டிருந்த தென்னை மரம் ,காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மரம் ,கட்டு யானைகள் சேதமாக்கியுள்ளது அந்த மக்களுக்கு துயரை ஏற்படுத்தியுள்ளது

தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள் செயல் பாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து காட்டு யானைகள் மேற்கொண்டு வரும் இந்த அத்துமீறல் செயல் பாடுகளிடம் இருந்து கிராமத்தையும் ,பயன் தரும் தோட்டங்களையும் அரசு காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் சிக்கி பலியாகும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது

பல நாட்கள் கடினப்பட்டு பாதுகாக்க பட்ட பயன் தரும் தென்னை மரங்கள் ஒரே இரவில் காட்டு யானைகளினால் அழிக்க பட்டுள்ளது

தமது எதிர்கால வாழ்வாதாரத்தை காட்டு யானைகள் பாதித்துள்ளன என அந்த உரிமையாளர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

கட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் செயல் பாட்டுகள் அதிகரித்துள்ளதால் இந்த பகுதியில் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

மக்கள் வீடுகள் அவர்கள் உயிருக்கு இந்த காட்டு யானைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்

யானைகள் அச்சுறுத்தலில் இருந்து தம்மை காப்பாற்றும் படி மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட மறந்ததன் விளைவே இந்த தென்னை தோட்டங்கள் அழிவிற்கு காரணமாகியுள்ளது

பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கிராமக்களுள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒநினைந்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பிள்ளைகள் போல இந்த தென்னை மரங்களை வளர்த்து வந்தோம் ,அதுவே எமக்கு வயதான் காலத்தில் பயனை அளிக்கும் என்ற நிலையில் வளர்த்தோம் அந்த தென்னை பிள்ளைகள் வீழ்ந்து கிடக்கின்றன

ஒவ்வொரு தென்னை மரமும் ஒவ்வொரு பிள்ளை என அந்த விவசாய மகன் கதறும் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது

    Leave a Reply