துரோக கலையே சென்று வா ….!

Spread the love

துரோக கலையே சென்று வா ….!

என்றே சாவாய் என்றே எண்ணிய
ஏக்கம் இன்று தணிந்தது
எங்களின் தலைவர் என்பவர் தலைகள்
எகிறுடும் காலம் பிறந்தது ….

கடவுளாய் உன்னை கூப்பியே தொழுதார்
காயங்கள் நெஞ்சில் வைத்தாய் …
கதறிய குரல்கள் கேழா நின்று
கை தட்டியே நன்று இரசித்தாய்….

செவந்த குருதியில் செத்தவன் தமிழன்
செந்தமிழ் வேந்தா அறியாய் ..?
பதவியின் மேலே பைத்தியம் கொண்டாய்
பார் தமிழ் உன்னில் உமிழ்ந்தார் …

அரியணை காத்திட அழுகுரல் காண
அன்றே அமைதி கொண்டாய் …
வாங்கிய பணத்தை காத்திட நன்றே
வஞ்சகம் புரிந்தாய் ….

இது நாள் வலியில் துடித்தவர் நெஞ்சம்
இன்றே கொஞ்சம் சிரித்தது …
இதய கணத்தில் இரண்டொரு பாதி
இன்றே கொஞ்சம் தணிந்தது ….

செத்தாய் என்றே செய்தி கூவி
சேர்க்குது மக்கள் கூட்டம் ..
பிணத்தை வைத்து பிறிதொரு நாடகம்
பிரளயமாய் இங்கு வெடிக்குது …

இறந்தும் உந்தன் இறப்பில் கூட
இயங்குது நன்றே நாடகம்
கலைஞ்ர் கருணா நிதியே
காட்டிய வழியில் ஊடகம் …

புதைத்தால் புழுவாய் எழுவாய் – தீ
புசித்த சாம்பால் ஆவாய் ….
முள்ளி வாய்க்கால் சிரிக்கிறது
முன்னே கொஞ்சம் பாராய் ….!

கருணா நிதி இறப்பில் ….!
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08/08/2018

Home » Welcome to ethiri .com » துரோக கலையே சென்று வா ….!

Leave a Reply