துயர் கண்டு சோராதே

Spread the love

துயர் கண்டு சோராதே

இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ….
வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
வருங்காலம் முடியும் தலை தூக்கு ..,,

அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
அதனாலே உயிர் விட முனைகின்றாய் ….
ஏதொரு பொழுதிலும் எழுந்தாடு
எமனோடும் நின்று போராடு …

உனக்குள்ளே வலிமையை உள்ளேற்று
உரமாகி எழுவாய் உனை நம்பு ….
மாற்று சிந்தையில் மடம் கட்டு
மலர்ச்சியை உந்தன் கை ஊட்டு .,.

சிந்தையில் புதிதாக கொடி கட்டு
சீக்கிரம் வெற்றிகள் உன் தோள்தட்டு …
ஆக்கினை கூடிட என் செய்வாய் ?
அழுவதால் என்ன நீ கண்டாய்..?

தேற்றியே உன்னை நீ எழுப்பு .
தேடிடும் உலகு உன் விருப்பு …,,
ஏசிய உதடெல்லாம் உனை பாடும் -நீ
எங்களின் உதராணம் என கூவும் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29/08/2017
அதிகரிக்கும் தமிழர்கள் தற்கொலைகளை எண்ணிய போது…..

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply